ஆலயங்கள் எப்பொழுது திறக்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில் அது வியாழக்கிழமைக்கு பிறகே தெரியவரும் என்று மலேசிய இந்து சங்கத்தின் தேசியத்தலைவர் டத்தோ ஆர்.எஸ்.மோகன்ஷான் தெரிவித்தார்.
இன்று காலை சுகாதார அமைச்சு, ஒற்றுமைத்துறை அமைச்சு ஆகியோர் கலந்து கொண்ட தேசிய பாதுகாப்பு மன்றத்தின் நடவடிக்கைக் குழு சந்திப்பு கூட்டத்தில் வழிப்பாட்டுத் தளங்கள் மீண்டும் திறப்படுமா என்பது 21.5.2020 அன்று முடிவு செய்யப்படும் என்றார். இது அனைத்து இந்து ஆலயங்களுக்கும் பொருந்தும் என்றும் டத்தோ ஆர்.எஸ்.மோகன்ஷான் தெளிவுப்படுத்தினார்.