ஈப்போ, மே 19-
பாரம்பரிய சமயல் கலை மூலம் உலக மக்களின் கவனத்தை ஈர்த்த சுகு பவித்ரா தம்பதியர் இன்று முதல் முறையாக யூடியூப் நிறுவனத்திடமிருந்து ஊதியம் பெற்றனர்.
28 வயது நிரம்பிய பவித்ரா கூறுகையில், இந்த சம்பளம் குறைவாக இருந்தாலும் எனக்கும் என் கணவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த பணத்தைக் கொண்டு என் குடும்பத்திற்கு புத்தாடை வாங்க விருப்பதாக இரண்டு பிள்ளைகளுக்கு தாயான அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய தமது யூடியூப் காணொளிகள் வெளியிடுவதை இன்றுடன் அவர் நிறைவுச் செய்தார்.
கடந்த ஜனவரி மாதம் தொடங்கி இன்று வரையில் தமது காணொளிக்கு கிடைத்த ஆதரவின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.
நாங்கள் வசதியான குடும்பம் இல்லை. சமூக வலைத்தளத்தில் பரவி வருவதை போல மிக பெரிய தொகையை நாங்கள் ஊதியமாக பெறவில்லை.
இதற்கிடையில் சுகு பவித்ரா என்ற பெயரில் நாங்கள் முகநூல் மற்றும் இஸ்தாகிராம் பதிவுகளை தொடங்கியதாக கூறப்படும் தகவல் உண்மை இல்லை. எங்களுக்கு யூடியூப் பதிவு மட்டுமே இருப்பதாக சுகு கூறினார்.