ஜாவி, மே 19-
பினாங்கு மாநிலத்திற்குள் நுழையும் வெளி மாநில வாகனங்கள் 18 தடுப்பிடங்கள் வழி கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒரு வாரத்தில் 4929 வாகனங்கள் திருப்பி அனுபப்பட்டன.
நிபந்தனைகளுக்கு உட்பட நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை பிறப்பிக்கப்பட்டதிலிருந்து நேற்று முன்தினம் வரை மொத்தம் 1 லட்சத்து 10 ஆயிரத்து 797 தனி நபர்களையும், 5566 இடங்களையும் 93 ஆயிரத்து 95 வாகனங்கள் சோதனையிடப்பட்டன. அதில் 4929 வாகனங்கள் பினாங்கிற்குள் நுழையாமல் திருப்பி அனுப்பப்பட்டனர். மேலும் 28 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பினாங்கு மாநில காவல் துறை தலைவர் டத்தோ ஷஹாபுடின் பின் அப்துல் மனான் கூறினார்.