கிள்ளான்:
கிள்ளான், கம்போங் தெலெக் பாருவில் உள்ள இரண்டு வீடுகளில் இன்று காலை ஏற்பட்ட தீச்சம்பவத்தில் ஒரு முதியவர் மற்றும் மற்றொரு ஆடவர் ஆகியோர் தீக்காயம் அடைந்தனர்.
சம்பவத்தின் போது 70 வயது முதியவருக்கு 40 சதவீத தீக்காயங்களும், 30 வயதுடைய மற்ற நபருக்கு 10 சதவீத தீக்காயங்களும் ஏற்பட்டன.
காலை 7.54 மணியளவில் தீ விபத்து குறித்து எச்சரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது என்று, சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் அமாட் முக்லிஸ் முக்தார் கூறினார்.









