காஜாங் மார்க்கெட்டில் கோழி, காய்கறிகள் விலை கட்டுப்பாட்டில் உள்ளது

காஜாங் –

மக்களின் தேவைக்கேற்ப அத்தியாவசியமான பொருட்களின் விலை மிகவும் கட்டுப்பாட்டுடன் உள்ளதென்று ஏ. ஜானகி, ஏ. ராணி, ச. இந்திராணி, த. ஷோபா, அப்துல் கனி, ப. அடைக்கலம், ரா. லலிதா, எல். பன்னீர் லிங்கம், வி. அம்மணி, எம். முத்து பெ. ஹரிகிருஷ்ணன் தெரிவித்தனர்.

காஜாங் மார்கெட்டில் இவ்வாண்டு ஹரிராயா பெருநாள் காலகட்டத்தில் பல பொருட்களின் விலை கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

கோவிட் – 19 வைரஸ் நோய்த் தாக்கத்தால் கடந்த சில தினங்களாக பட்டியலுடன் வரும் மக்களின் மனப்போக்கு மிகவும் வரவேற்கத்தக்கது.

மேலும் தகவல் சாதனங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் உணவுப் பொருட்கள் காலியாகிவிட்டதாக வதந்தி வெளியானதைத் தொடர்ந்து மக்கள் அவசர அவசரமாக உணவுப் பொருட்களை வாங்கி வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுவதாக பரவலாகத் தெரிவிக்கப்பட்டது.

இதன் தொடர்பாக மக்கள் பீதியடைய வேண்டாம் என கருத்துரைத்தனர்.
பெருநாள் காலத்திற்குத் தேவையான பலசரக்குப் பொருட்கள் கையிருப்பு உள்ளது.
இதில் தேங்காய் பால் 1/2 கிலோ வெ. 3.50, வெங்காயம் வெ. 3.00, உருளைக்கிழங்கு வெ. 3.00, சின்ன வெங்காயம் வெ. 6.00 , இஞ்சி வெ. 10.00, பூண்டு வெ. 11.00 உட்பட கோழி இறைச்சி கட்டுப்பாட்டு விலையில்தான் ஒரு கிலோ 7.50 வெள்ளியில் விற்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here