கோவிட் 19- சிலாங்கூர் மாநிலத்தில் 15,000 பேருக்கு மஇகா உதவி

கோவிட் 19 நோய் தொற்றின் காரணமாக நாட்டில் அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையால் சிரமப்பட்டு வந்த 15,000 சிலாங்கூர் மாநில வாசிகளுக்கு உதவிகள் வழங்கியிருப்பதாக மாநில மஇகா தலைவர் எம்.பி.ராஜா கூறினார்.

இக்காலக் கட்டத்தில் மஇகா முன் நின்று இந்தியர்களுக்கு உதவிகளை வழங்கியது. குறிப்பாக சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதி தலைவர்களும் சொந்த முயற்சியில் மக்களுக்கு உதவிகள் வழங்கி வந்தனர்.

மக்கள் எதிர்நோக்கக் கூடிய பிரச்சினைகளுக்கு முதல் ஆளாக நாங்களே நிற்கின்றோம். யார் ஆட்சி செய்தாலும் மஇகா இந்தியர்களுக்கு பணியாற்றிக் கொண்டே இருக்கும் என்ற தேசியத் தலைவரின் கோட்பாட்டிற்கு ஏற்ப நாங்கள் செய்ல்பட்டு வருகிறோம். அதன் அடிப்படையில் உலகமே கோவிட்டை எதிர்த்து போராடும் வேளையில் வசதி இல்லாதவர்களுக்கு நாம் முடிந்த அளவு உதவிகளை செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

தற்போது மஇகாவின் முயற்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உதவி எனும் செயலி மூலம் ஏராளமான மக்களுக்கு உதவிகளை வழங்க முடியும். அதே சமயம் அவர்களின் விவரங்களையும் மஇகா சேகரித்து அவ்வப் போது அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு மஇகா உதவிகளை வழங்கும் என்று மஇகாவின் தலைமைச் செயலாளர் டத்தோ அசோகன் கூறினார். இரண்டு நாட்களில் 728 பேர் உதவி பக்கத்தில் தங்களை பதிவு செய்துள்ளனர். இது தொடக்கம் தான் இன்னும் அதிகமான மக்களுக்கு இதன் மூலம் மஇகா வழிக்காட்டும் என்று நேற்று மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற சிலாங்கூர் மாநில தலைவர்களுடனான சந்திப்பில் பேசிய அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here