சீன் போடுகிறதா சீனா?

ஒன்றைச் செய்துவிட்டு அதை மறைக்க  முயல்வது நல்ல செயலாகாது. செய்ததில் தவறு நேர்ந்துவிட்டது என்று வெளிப்படையாகத் தெரிவிப்பது நல்ல மனிதாபிமானகும். அப்படித் தெரிவிக்கும்போது, திருத்திக்கொள்ள வாய்ப்பு அமைந்துவிடும். அதனால் மேலும் தவறுகள், நட்டங்கள் ஏற்படாமல் தவிர்த்துவிட முடியும்.

இப்படிச் சொல்வது சராசரி மனிதனுக்குப் பொருத்தமானது என்று மட்டும் நினைத்துவிடக்கூடாது. அனைவருக்குமானது என்று நினைத்தால்தான் நன்மையானதாக இருக்கும்.

இது, அரசியலுக்கும் பொருந்தும் அரசாங்கத்தும் பொருந்தும். மக்களுக்கும் பொருந்தும் மகாத்மாவுக்கும் பொருந்தும். அப்படிச் செய்வதை பல தரப்பினர் விரும்புவதில்லை. குற்றம், தவறு என செய்தபின் அதை மூடிமறைத்துவிட்டு, புழுதிவாரி வீசுவதையே பொழுதுபோக்காக செய்துவருகின்றன இருநாடுகள்.

அமெரிக்காமீது சீனாவும், சீனா மீது அமெரிக்காவும் ஒன்றையொன்று குற்றம் சுமத்திக்கொண்டிருக்கின்றன என்பதால், எந்த நன்மையும் ஆகப்போவதில்லை என்பது கிராமத்தில் ஆடுமேய்க்கும் அரசியல்வாதி பையனுக்கும் தெரியும்.

கிராமத்து அரசியல் வாதிகளுக்குத் தெரிந்த அரசியல் கூட அமெரிக்க அதிபருக்குத் தெரியாததாக இருக்கிறது என்று சீனா சீன் போட்டுக்கொண்டிருக்கிறது. பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிக்கொண்டிருக்கிறது சீனா என்று அமெரிக்க அதிபர் டிரம்ப்  வண்டி வண்டியாய் ஏற்றிக்கொண்டிருக்கிறார்.

ஒருவரை ஒருவர் ஆள்காட்டி விரலால் சுட்டிக்கொண்டிருப்பதால் ஆகப்போவது ஒன்றுமில்லை. ஆகவேண்டியதைப் பாருகப்பா என்று மாநகர் மன்ற தூய்மைப்பணியாளர் கூறுவதையும் அலட்சியப்படுத்திவிட முடியாது.

இன்றைய தேவை என்ன?

உலகம் முழுவதும் கொரோனா வியாபித்துவிட்டது. இதனால் 3  லட்சத்திற்கு அதிகமான மக்கள் பலியாகி இருக்கின்றனர். மக்களைக் காப்பாற்றும் முயற்சியில் உலக நாடுகள் போராடிக்கொண்டிருக்கின்றன. வெற்றியும் தோல்வியும் சமமாகவே இருக்கின்றன.

இதுவரை மருந்து கண்டிபிடிக்கப்படவில்லை. கண்டுபிடித்தாலும் சோதனைக்குப்பின் தான் பயன்படுத்த முடியும். அதற்கும் ஈராண்டுகாலமாவது பிடிக்கும். அது வரை என்ன செய்யப்போகிறார்கள் ?

சுட்டல் என்பது சுகமானதல்ல என்பதை அமெரிக்காவும் சீனாவும் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதுதான் தூய்மைப் பணியாளரின் தூய்மைப் பேச்சாக இருக்கிறது.

முதலில் மருந்து, அப்புறம் அதுபற்றிப்பேசி வருந்து , வருந்திய பின் விருந்து இப்படித்தான் இருக்க வேண்டும் . இப்படித்தானே இருக்க வேண்டும்.

கொரோனா எங்கிருந்து கிளம்பியது என்பதற்கு சீனாவின் வூஹான்   சான்றாக இருக்கிறது. தொலைத்த இடத்தில்தான் தான் தேடவேண்டும் என்றிருக்கும்போது கிளம்பிய இடத்திலிருந்துதானே ஆய்வுகள் நடத்த வேண்டும்?

எட்டு மாதங்களுக்கு முன்னமே வூஹான் ந்கரில் கோரோனா பதுங்கியிருந்தது என்று ஆய்வுகள் கூறுகின்றன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே அமைதியாக குடித்தனம் செய்திருப்பதாகவும் செய்தி இருக்கிறது. அப்படியானால் சீனா….!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here