பிலிப்பைன்சில் கனமழை, வெள்ளம்; 16 பேர் பலி

மணிலா, ஆசியாவில் அமைந்துள்ள நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டில் பல்வேறு தீவுகள் அமைந்துள்ளன.

கனமழை, வெள்ளம், நிலச்சரிவு

இதனிடையே, அந்நாட்டின் தலைநகர் மணிலா, லுசன் தீவு, பஹுவொய் உள்பட வடக்கு நகரங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கனமழையால் பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

16 பேர் பலி

இந்நிலையில், பிலிப்பைன்சில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் , பலர் படுகாயமடைந்துள்ளனர்.

வெள்ளம், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். கனமழையுடன் பலத்த சூறாவளி காற்றும் வீசி வருவதால் லுசன் தீவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை தொடர்ந்து பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here