நாட்டின் இக்கட்டான சூழலில் முன்னணிப்பிபணியாளர்கல் மிக முக்கியமானவர்க்ல் என்பதை சொன்னால் மட்டும் போதாது. முன்னுணியாளர்களின் பிரச்சினைகள் என்ன? அவர்ளின் சிரமங்கள் என்ன என்பதையெல்லாம் தெரிந்து கொள்வது தேடல் அல்ல, தெளிவாகும்.
முன்னணி வரிசையில் போலீஸ்காரர்களும் இருக்கிறார்கள் என்பது பலருக்குத்தெரியாமல் இருக்கிறது. அவர்கள் வெறும் போலீஸ்காரர்கள் என்பது மட்டும்தான் மக்களின் சிந்தனையாக இருக்கிறது.
குறிப்பாக, போலீஸ்துரை இல்லாமல் போனால் நாட்டில் குழப்பங்கள் மிகுதியாகவிடும். போலீஸ் என்று சொன்னாலே ஒருவித அச்சம் மனத்தில் தோன்றிவிடுகிறது. அந்த அச்சம்தான் குற்றம் செய்யாமல் தடுக்கிறது. பொதுவாகவே போலீஸ் என்றால் பாதுகாப்பு, சட்டம், ஒழுங்கு, நீதி, நேர்மை, பயம், பக்தி என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
சில போலீஸ்காரர்கள் நியாயமாக இல்லையே என்பதும் காதில் விழுகிறது. இந்த வகையில் பார்வையாளர்களின் நோக்கு என்ன என்பதிப்பொறுத்தே எண்ணம் அமைகிறது.
இதற்கு உதாரணம் ஒன்றைச்சொல்லலாம். ஒரு சாலைத்தடுப்புச் சோதனையின்போது ஒரு பெண்மணி போலீஸ்காரரைப் பார்த்து முட்டாள் ( இடியட்) என்று ஆங்கிலத்தில் கூறியிருக்கிறார். இப்படிக்கூறுவதற்கு முன் சற்று சிந்தித்திதிருந்தால் 3,100 வெள்ளி அபராதமாகச் செலுத்தியிருக்க வேண்டாம்.
முட்டாள் என்ற வார்த்தையின் மதிப்பை நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. இதற்கான தண்டனை இன்னும் நீளமானது. ஆனாலும் நீதிமன்றத்திலும் கருணை கணக்குப்பார்க்கப்பட்டிருக்கிறது. வயதானவரை பராமரிக்கும் பொறுப்பு என்பதை கணக்கில் சேர்த்திருக்கிறார் நீதிபதி.
ஓர் அரசு ஊழியராக மட்டும் போலீஸ்காரர் செயல்படவில்லை. அரசாங்கத்தின் பிரதிநிதியாகவும், சுகாதாரப்பிரநிதியாகவும், சாலையைக் கடக்கும் மக்களுக்கு வழிகாட்டியாகவும், சாலையின் விதிமுறைகளைப்படுத்த கற்றுத் தருபவராகவும் செயல்பட்டிருக்கிறார். அவருக்கு நம்மிடம் இருந்து கிடைக்க வேண்டிய வார்த்தை நன்றி என்பதாகத்தான் இருந்திருக்க வேண்டும். அதைவிட்டு முரட்டுத்தனமாக சிந்திக்காமல் முட்டாள் என்றால் யார் முட்டாள் என்பதை நீதிமன்றம் நிரூபித்த பின் உணர்ந்துகொள்ள வழக்கறிஞர் தேவைப்பட்டிருக்கிறது. ஆக மொத்தம் முட்டாள் என்பதன் மொத்தச் செலவு 10 ஆயிரம் வெள்ளியாகவும் ஆகியிருக்கும்.
இதில் நன்றி என்ற வார்த்தையை பயன்படுத்தியிருந்தால் நேரம் மிச்சம், காலம் மிச்சம், பணம் மிச்சம். அவமானம் ஏற்பட்டிருக்காது, நீதிமன்ரம் வரை போயிருக்கத் தேவையில்லை. அதற்காக அலைந்து அல்லல்பட்ட நிலை ஏற்பட்டிருக்காது.
ஒரு புன்னகையால் இவற்றை சமாளித்திருக்கலாம். நன்றி என்று கூறியிருந்தால் 10 நிமிடத்தில் மாயம் நடந்திருக்கும்.
போலீஸ்காராரும் மனிதர்தானே, கடமை என்று வரும்போது அதன் பார்வை வேறு. முன்னணியாளர்களின் தியாகம் மதிக்கப்படவெண்டும். அவர்களின் கடமையுணர்வுக்கு ஒரு சலாம் போடாவிட்டாலும் பரவாயில்லை. மதிக்கப்படவேண்டும்.
முன்னணியாளர்கள் தங்கள் கடமையுணர்ந்து காரியம் ஆற்றாவிட்டால் நாட்டின் நிலைமை சீர் கேடாய் மாறியிருக்கும்.
மதிப்போம், குற்றங்களை மறப்போம்.