கண்திறப்பான் ஆண்டவன்

ஜூன் 10 ஆம்நாள் என்பது ஒரு திருப்பு முனையாக அமையுமா என்ற எதிர் பார்ப்பு தேவாலயங்களுக்கும் இந்து வழிபாட்டுத்தலங்களுக்கும் நிறையே இருக்கிறது.

கோவிட் -19 தொடங்கிய நாளிலிருந்து தெய்வ வழிப்பாட்டுட்டுத் தலங்கள் முடங்கிக் கிடக்கின்றன. முடங்கிக்கிடப்பதால் உலக இயக்கம் நின்று விடவில்லை. பிரபஞ்சத்தின் திருவிளையாடல்களில் இப்போது நடப்பது கொரோனா காண்டம். இக்காண்டம் நடப்பதும் இறைவனின் செயல் என்று ஏன் நம்பக்கூடாது. நினைப்பதற்கும் எண்ணுவதற்கும் அனைவருக்கும் உரிமை உண்டு. அதற்குத் தடையுத்தரவு இன்னும் விதிக்கப்படவில்லை.

எண்ணத்தைச் செயல்படுத்தும்போது மட்டும் அந்தச்செயல் உங்களுக்கானதாக இருக்கவேண்டும். அந்தசெயலுக்கோ, செயல்களுக்கோ ஒட்டுமொத்த உரிமையாளர் எண்ணுகின்றவர்களைச் சார்ந்தது. அதற்கான பொறுப்பை அவர்களே ஏற்கவேண்டும்.

எதை யார் செய்யவேண்டும்? எப்போது செய்யவேண்டும்? எதற்காகச் செய்யவேண்டும் என்பதையெல்லாம் முடிவு செய்வது நம்மில் யாரோ அல்ல. யோரோ நம்முள் இருந்து இயக்குறார்கள் என்கிறார்கள். இது உண்மையா இல்லையா என்பதற்குச் சரியான பதிலை இன்னும் யாரும் கூறியதாக நினைவில்லை. அது வரை நம்மை யாரோ இயக்குகிறார்கள் என்பதுதான் சரி என்றால் அது யார்?

எப்போதுமே பெயர் தெரியா நபருக்கு எக்ஸ் என்று ஒரு பெயர் வைத்திருப்பார்ககள். உண்மையான பெயர் அறிவிக்கப்படும் வரை அதன் பெயர் எக்ஸ் என்றால் அப்பெயருக்குக் கடவுள் என்று கூறுவது பற்றியும் யோசிக்கலாமே!

இதைச்சொல்லவேண்டிய அவசியம் இருக்கிறது.. இது, கடவுள் இருக்கிறாரா என்பது வாதமல்ல. கடவுள் இருப்பதினால்தான் நம்பிக்கை மிகுதியாகிறது. போலீஸ்காரர்கள் வருமுன்னே முதலில் ஊர்ரைக்காக்கும் கடவுளாக இருந்தது காவல் தெய்வம். அதற்குப்பின்தான் போலீஸ்படை உருவானது.

எல்லையைக் காக்க போலீஸ் இருப்பதை நம்பும்போது மக்களைக் காக்க போலீசாராக கடவுள் வரமாட்டாரா? இதை நம்பும்படி யாரும் அடித்தார்களா? இல்லவே இல்லை.

கொரோனா காலத்தில் கடவுள் வாழும் இல்லத்தைப்பூட்டி வைத்துவிட்டால் இறைவன் இல்லையென்பதில்லை. ஜூன் 10 ஆம்நாள் பச்சை மண்டலங்களில் ஆலயங்கள் சில கட்டுப்பாட்டுகளுடன் திறக்கப்படும்போது 30 பேர் வரை அனுமதிக்கப்படுவர். இதிலிருந்து என்ன தெரிகிறது. ஆண்டவனை அரசுதான் இயக்குகிறது. அரசுதான் முதன்மையாக செயல்படுகிறது. ஆலயத்தில் ஆண்டவனை சந்திக்க வேண்டுமானால் அரசு அனுமதி அவசியம் வேண்டும் என்றாகிவிட்டது. இதில் ஆண்டவன் தலையிடவில்லை. ஆண்டவனுக்கும் தெரியும் கொரோனாதான் காரணமென்று. அந்த அதிகாரத்தை ஆண்டவனே அரசுக்கு வழங்கியிருக்கிறான். ஆண்டவனே அனைத்தையும் செய்கிறான் என்பதை ருக்குன் நெகாரா கோட்பாடும் கூறுகிறது.

கா.இளமணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here