ரமடான் சந்தையில் மக்களை மோதிய வாகனமோட்டிக்கு 5 நாள் தடுப்பு காவல்

இங்குள்ள புக்கிட் செந்தோசா ரமாடான் சந்தையில் மக்களை மோதிய ஆடவரை 5 நாட்கள் தடுப்பு காவலில் வைக்க ஷா ஆலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று மாலை 6 மணியளவில் தோயோத்தா ஹைலக்ஸ் ரக காரில் சந்தைக்குள் வேகமாக நுழைந்த அவ்வாடவர் கடைகளையும் மக்களையும் இடித்து தள்ளியுள்ளார். அதில் பாதிக்கப்பட்ட சிலர் காயங்களுடன் உயிர் தப்பினர்.

இக்காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வந்த நிலையில் போலீஸார் அவ்வாடவரை கைது செய்தனர்.

இன்று காலை ஷா ஆலம் நீதிமன்றத்தில் அவ்வாடவருக்கு 7 நாட்கள் தடுப்பு காவல் விதிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here