முயல் ஆமை ஒட்டம்! மக்களின் வாட்டம்

மக்களில் சராசரி மக்கள் தொகையே மிக அதிகமாக இருக்கிறது. இவர்களுகுகத் தேவையான பொருட்கள் கிடைப்பதும், அவை வாங்கும் விலையில் இருப்பதுதான், கிடைப்பதும்தான் இன்றைய அத்தியாவசியம்.

இது பற்றி யாரும் கவலைப்படுவதாக இல்லை என்றே ஆய்வுகள்  காட்டுகின்றன.

மக்களுக்கான மருந்துவகைகளில் ஏழைமக்கள் கவனிக்கப்படவில்லை என்பதாகவே குறைபாடுகள் அதிகம் இருக்கின்றன. பொது மருத்துவமனைகளின் மருந்தகம் பல மருந்துகளை கைவசம் வைத்திருக்கவில்லை. அது, கையிருப்பில் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை. காரணம் மருந்துகளுக்கான விலைதான் காரணமாக இருக்கிறது என்பது பரவலான செய்தி.

தேவைப்படும் மருந்துகளை மட்டுமே கொள்முதல் செய்ய அரசாங்கம்  முனைப்புக்காட்டுவதாகப் பொதுக்கருத்துகளும் நிலவுகின்றன. இது உண்மை என்பதற்கு சொந்த அனுபவனங்களும் பலரிடம் இருக்கின்றன.

சில மருந்துகள் கைவசம் இல்லை என்பது அண்மைக்கால பதிலாகும். அரசு மருந்தகங்களில் பல வேளைகளில் அப்படித்தான் இருக்கின்றன. அப்படியென்றால் சில மருந்துகளை வெளி மருந்தகங்களில் வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்லாமல் கூறுவதுபோலவே எண்ண வேண்டியிருக்கிறது.

அரசு மருந்தகங்கள் கையிருப்பைக் குறைத்துகொள்கிறதா? அல்லது வெளியார் மருந்தகங்களுக்கு வாய்ப்பளிக்கிறதா என்பதைப்புரிந்துகொள்ள முடியவில்லை.

மருந்துகளுக்கான செலவைக்கட்டுப்படுத்தும் முயற்சியில் பொது மருத்துவமனைகள் செயல்படுகின்றன என்பதுதான் சரியானதென்றால் ஏழைகளுக்கான மருந்துகள் மிகச்சரியான விலையில் கிடைக்க அரசு என்ன செய்கிறது?

தனியார் மருந்தகங்கள் ஏழைகளுக்கான மருந்தகங்களாக இல்லை என்பது மட்டும் மிகத்தெளிவு. மருந்துகளின் விலைகள் கட்டுப்பாட்டில் வைக்கபட அரசு முயலுமா?

அல்லது முயல் ஆமையாகப் பந்தயம் நடத்துமா?

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here