கோலாலம்பூர்:
காலையில் எழுந்தவுடன், கண்களிலும், முகத்திலும் வீக்கம் ஏற்படுவது, சிறுநீரகப் பிரச்சினையின் முக்கிய அறிகுறியாக இருக்கலாம் என்று, கிட்னி கேர் யூகே (Kidney Care UK) அமைப்பு தெரிவித்துள்ளது. இது, சிறுநீரகச் செயல்பாடு மோசமடைவதன், முக்கிய அறிகுறியாகும்.
சிறுநீரக நோயின் மற்ற அறிகுறிகள்
சிறுநீரகச் செயல்பாடு மோசமடைந்தால், காலையில், தொடர்ந்து நுரை கலந்தச் சிறுநீர், வறண்ட சருமம், முதுகு மற்றும் கைகளில் அரிப்பு, சோர்வு, கவனம் செலுத்த இயலாமை மற்றும் வாயில் துர்நாற்றம் போன்ற அறிகுறிகள் தென்படலாம். நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் (high BP) உள்ளவர்களுக்கு, சிறுநீரக நோய் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது.























