நல்வாழ்வு காணும் நாள்

உருப்படியான யோசனையை நோன்புப் பெருநாள் செய்தியாக அரசு வழங்கியிருக்கிறது என்றுதான் கூறவேண்டும். உண்மமையிலேயே இதற்கு ஒரு சபாஷ் போடத்தான் வேண்டும்.

நோன்பு காலத்தில், பெருநாள் மட்டுமே எண்ணமாக இல்லாமல், நாட்டின் நிலைகுறித்தும் சிந்திப்பது என்பது சிறந்த அரசியலுக்குச் சான்றாக இருக்கிறது. இதை  மலேசியம் உறுதிப்படுத்தியிருக்கிறது. அமைச்சர் டான்ஶ்ரீ மூசா அனுவார் இதற்குச் சான்றாக இருக்கிறார்.

நகரிலுள்ள வீடற்ற மக்கள் எதிர்ப்பார்ப்புகளுடன் வாழ்வது அத்துணை சிறப்பானதாக இருக்கமுடியாது, அவர்களுக்கு வீடில்லை, உணவில்லை, பிற உதவிகள் இல்லை என்பதுதான் பதிலாக இருந்துவந்தது. இது கொரோனாவுக்கு முன் உள்ள பிரச்சினை.

அண்மைய கொரோனா பாதிப்பில் அவர்ககள் பொது மண்டபத்தில் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். கூடல் இடைவெளி, தனிமை எனவும் அவர்கள் அறிந்திருக்கின்றனர், ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். இதுதான் அடிப்படை. இதிலிருந்து இன்னும் கூடுதலாக அவர்கள் கற்றுக்கொண்டு, மாறுபட்ட வாழ்க்கைக்குத் திரும்பவேண்டும் என்ற யோசனையை அரசு முன்வைத்திருக்கிறது.

நாட்டின் வேலை வாய்ப்புகளில் அந்நியர்களின் ஆதிக்கம் மிக அதிகம் என்று அலட்டிக்கொள்கின்ற வேளையில், உள்நாட்டினர் உணர்வோடு தொழிகளை ஏற்க ஊக்கிவிக்கப்படவேண்டும். அப்படியில்லை என்பது வருத்தமான செய்தி. இத்ற்கு மாற்றாக வீடற்றவர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படவிருக்கின்றன என்று அமைச்சர் கோடி காட்டியிருக்கிறார்.

நோன்புப் பெருநாளுக்குபின் இப்பயிற்சிகள் வழங்கப்படும் என்ற அவரின் பேச்சு செயல்படுத்தப்பட்டபின், அவர்களுக்குப் புது வாழ்க்கை ஆரம்பமாகிடும். சுயமாக சம்பாதிக்கும் திறன்பெற்றவர்களுக்கு ஏற்ப பயிற்சிகள் அமைவதும் திறனுக்கு ஏற்ப தொழிலில் அமர்த்தபடுவதும் விவேகமான சிந்தனை.

வீடற்றவர்களால் உழைக்கமுடியும். சுயகாலில் நிற்கமுடியும். அவர்கள் குடும்பத்தாரால் ஒடுக்கப்பட்டபோது, ஒதுக்கப்பட்டனர். வேலை கொடுப்பதற்கும் ஆளில்லை. நிறுவனங்களும் தயராக இல்லை. அவர்கள் கைவிடப்பட்டவர்களாக மாறிவிட்டனர். இதுதான் உண்மை.

கொரோனா வந்தபின்னர்தான் பலர் விவேகமாக சிந்திக்கத் தொடங்கினர். அதன் விளைவுதான் கைவிடப்பட்டவர்களுக்கு அரசாங்கம் கைகொடுத்தது. அவர்களை ஒரே இடத்தில் மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளிக்கு ஏற்ப பாதுகாத்தது   உணவளித்தது.

கொரோனாவுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் கைவிடப்பட்டவர்களாக மாறிவிடக்கூடாது என்பது அரசின் சிந்தனையாகி இருக்கிறது. அவர்களின் ஆற்றலுக்கு ஏற்ப பயிற்சிகள் வழங்கப்படும். சிலாங்கூரின் சுபாங், குவந்தான் மாநிலத்திலும் சுமார் 360 பேர் பயற்சிபெறவிருக்கிறர்கள்.

நோயாளிகளாக இருக்கும் 60, 70 வயதினர் சமூக நலத்துறையின் கண்காணிப்பில் ஒப்படைக்கப்படுவார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here