கொரோனா குறித்த பயமோ.. ஊரடங்கோ தேவை இல்லாத ஒன்று.. நடிகர் மன்சூரலிகான்!

கொரோனா வைரஸ் குணப்படுத்தக் கூடிய ஒன்று தான். அதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தது தேவையில்லாது, என்று நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மன்சூரலிகான் விடுத்துள்ள அறிக்கையில், “தட்டம்மை, தடுப்பம்மை போன்றவற்றை குழந்தை பருவத்திலேயே எதிர்கொண்டு நம் உடல் வலிமை பெற்று இருக்கிறது. மேலும், நமது உணவு பழக்கங்களால் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது இயற்கையிலேயே அதிகமாக உள்ளது என்றும் அவர் கூறி உள்ளார் .

கொரோனாவை பார்த்து நாம் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. ஏன், தமிழகத்தில் கொரோனா ஒன்றுமே இல்லை, என்பது தான் என் கணிப்பு. நம் மூதாதையரின் வைத்தியமே கொரோனாவை 100 சதவீதம் குணப்படுத்திவிடும். சளி, இருமல் போன்றவைகள் வந்தால், சுக்கு, மிளகு, இஞ்சி போன்றவற்றை கொதிக்க வைத்து குடித்தால், இரண்டு நாட்களிலேயே சளி காணாமல் போய்விடுகிறது. மேலும், தூதுவலை உள்ளிட்ட ஏகப்பட்ட இயற்கை மருத்துவம் நம் கையில் இருக்கிறது. இவை அனைத்தும் நம்மை காப்பாற்றும் என்றும் கூறியுள்ளார்.

சளி மற்றும் காய்ச்சலை வைத்து வரும் கொரோனாவையும், நம் உணவு பழக்கம் மூலம் நாம் எளிதாக எதிர்கொள்ள முடியும். ஆனால், நம் நாட்டு அரசு, மேலை நாட்டினரை பார்த்து பயந்து ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. ஊரடங்கே இங்கே போட்டிருக்க கூடாது என்பது தான் என் கருத்து. இதனால், ஏழை எளியவர்களின் வாழ்வாதாரமும், வாழ்வும் கேள்விக்குறியாகி இருப்பதோடு, நாடே மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் இருக்கிறது.

சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி அளித்திருக்கும் அரசு 20 நபர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும், என்று கட்டுப்பாடு விதித்திருக்கிறது. அப்படியானால் மற்றவர்கள் என்ன செய்வார்கள். எனவே, இது குறித்து மூத்த கலைஞர்கள் ஒன்றிணைந்து பேசி நல்ல முடிவை எடுக்க வேண்டும். நல்ல முடிவு விரைவில் எடுத்தால் தான் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க முடியும் .

திரைத்துறை மட்டும் இன்றி மேலும் பல துறைகள் மீண்டும் பழையபடி செயல்பட உத்தரவு விட வேண்டும், என்று மத்திய மற்றும் மாநில அரசுகளை தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன். அதேபோல், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் மற்றும் கோவில்களையும் திறக்க வேண்டும், என்றும் கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார் பிரபல நடிகர் மன்சூர் அலி கான் . சோசியல் டிஸ்டன்சிங் முறையை கடைபிடித்து வாழ துவங்க வேண்டும் . அப்படி செய்தால் எல்லோரும் நலமாக இருக்கலாம்

சினிமா துறை மீது அக்கறையாக பேசி இருக்கும் மன்சூர் அலி கான் கருத்துக்கள் மீது ஒரு பக்கம் ஆதரவு இருந்தாலும் மற்றொரு பக்கம் கொஞ்சம் கேலியும் கிண்டலாகவும் தான் பேசுகிறார்கள். கொரோனா பற்றி கொஞ்சம் கூட பயம் இல்லாமல் அவர் தலையை ஆட்டி ஆட்டி சினிமா வில்லன் போல் பேசினாலும் மக்கள் மனதில் அச்சம் இன்னமும் குறைந்த பாடு இல்லை. மன்சூர் அலி கான் எந்த ஒரு கருத்தையும் தைரியமாக பேசுபவர். அது மேடையாக இருந்தாலும் சரி கேமரா முன்னாக இருந்தாலும் சரி , அவர் பேசிய இந்த கருத்துக்களுக்கு வித்யாசமான கமெண்ட்ஸ் வந்து கொண்டே தான் இருக்கும். அதை பற்றி கவலை படாத ஒரு மனிதர் தான் மன்சூர் அலி கான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here