பாதையை மறைக்கும் போதை

உலக நாடுகளில், மதுப்பழக்கத்தால் ஏற்படும் விபத்துகள் மிக அதிகம். மரணங்களும் அதிகம். அப்படியிருந்தும் யாரும் அதற்காக வருந்தியதாக இல்லை. தண்டனை என்பதில் கூட வருத்தபடுவதாக இல்லை.

கொரோனா தொற்று காலத்தில் ஏற்பட்ட பல சாலை விபத்துகளில் போதை ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. கொரொனாவுக்கு முன்னும் போதைச் சட்டம் கடுமையாக இருந்தது. போதையினால் ஏற்பட்ட பல விபத்துளில் மரண எண்ணிக்கையும் கணிசமாக இருந்தது.

போதை இல்லாமல் இருந்திருந்தால் பல உயிர்களை மரணம் நெருங்காமல் தடுத்திருக்க முடியும். இதில் போதையே பல மரணங்களுக்குக் காரணமாக இருந்திருக்கின்றன என்பதை ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.

மது பழக்கத்தில், உலக நாடுகளின் வரிசையில் மலேசியா 10 ஆவது இடத்தை தக்க வைத்துக்கொண்டிருக்கிறது என்ற ஒரு செய்தியும் ஆச்சரியப்பட வைக்கிறது. வசதிப்படைத்த நாடுகளின் வரிசை இதுவென அசரவைக்கிறது.

ஒரு சிறிய நாட்டில் மது விற்பனை மிக அமோகமாக இருக்கிறது என்பதை 2016 ஆம் ஆண்டின் ஆய்வு உறுதிப்படுத்தியிருக்கிறது. இதற்காக அதிக வரி செலுத்தப்பட்டாலும் மது நிறுவனங்கள் மிக அதிகமாகவே ஆதாயத்தைப் பதிவு செய்வதாக அதன் அறிக்கைகள் காட்டுகின்றன.

ஆதாயத்தைக் காட்டும் மது விற்பனையால் மரணத்தைக் குறைக்க முடியாது. குறிப்பாக 24 மணிநேர மதுபான விற்பனைக் கடைகள் மதுபானம் விற்கும் நேரத்தைப் பின்பற்றுமாறு கண்காணிக்கப்படவேண்டும்.

இரவு 10 மணிக்குள் மது விற்பனை அமையுமாறு நேரம் அமைந்தால் பின்னிரவு விபத்துக்களால் ஏற்படும் மரணங்களைத் தவிர்க்கலாம். பெரும்பாலும் இரவு விபத்துகளே மரணதிற்குக் காரணமாகின்றன.

மது போதையில் வாகனம் ஓட்டுவது பெரும் குற்றமெனக் கருதுதல் வேண்டும். இத்தவற்றைச் செய்கின்றவர்களுக்குக் கடுமையான தண்டனை என்பது சரியானதே!

போதை என்பதால் நியாயமான காரணங்கள் இருந்தாலும் செல்லாமல் போகவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here