ரவாங் சுங்கை புவாயா எனும் சாலையில், காய் கறிகளை ஏற்றிச் சென்ற 10 டன் எடைக் கொண்ட லோரி ஒன்று தடம் புரண்டது. அந்த லோரியில் இருந்த ஓட்டுனரும் உதவியாளரும் காயங்களுடன் உயிர் தப்பினர்.
இன்று காலை தாய்லாந்திருலிருந்து காய் கறிகளை ஏற்றிக் கொண்டு செலாயாங்கை நோக்கி வந்து கொண்டிருந்த லோரி வேகக் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பு கம்பியில் மோதி தடம் புரண்டது. லோரியின் ஓட்டுனர் முகமட் ஸஃப்ரி வயது 25, உதவியாளர் முகமட் ஸக்ரி வயது 26 இருவருக்கும் காயம் ஏற்பட்ட வேளையில் லோரியில் இருந்த பொருட்கள் சாலையில் சிதறின.
இந்த விபத்தால் அச்சலையில் நெரிசல் எதும் ஏற்படவில்லை என்பதை போலீஸார் உறுதிப்படுத்தினர். அதோடு காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக செலாயாங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்