மது ஒரு மாயை

மது விற்பனை பற்றி மலிவான செய்திகள் பரவலாகப் பேசப்படுகின்றன. தொடர்ந்து பல உத்தமர்கள் கருத்து கூறியும் வருகின்றனர்.

நல்லது சொன்னா கேட்டுக்கணும் என்பதுதான் வழக்கமானதாக இருக்கிறது.

பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டும் கதைதான். இது. மலேசிய பஞ்ச தந்திரக் கதையாகவும் இருக்கிறது. ஏனெனில் மது அருந்துவது தவறு என்று சொல்கிறதே அன்றி மது விற்பனை இல்லை என்று ஏன் கூறவில்லை. அல்லது ஏன் தடுக்கவில்லை?

சிகரெட் புகைப்பது தவறு என்றால் வேப்  ஏன் பயன்பாட்டுக்கு வந்தது.

ஒன்றைத் தடுக்கும்போது அல்லது நிறுத்தும்போது அதற்கு மாற்றாக ஒன்றைத்  தயாரிக்கும் எண்ணம் இயல்பாக இயங்க ஆரம்பித்துவிடும்.

மது விற்காதே என்று சொல்லவும் முடியாது. அப்படிக் கூறினால் மற்றொன்று புழக்கத்திற்கு வந்துவிடும்.

மது அருந்தும் நேரத்தைக் கட்டுப்படுத்தலாம் அல்லது வீட்டுக்கு வாங்கிச்செல்லாம் என்றும் வகைப்படுத்தலாம்.

ரகசியமாக மது அருந்துகின்றவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் யார் என்பது தெரிந்தும் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கிறது. அது வேறு கதை என்று விட்டுவிடவும்  முடியாது.

மது நமது கலாச்சாரமல்ல. ஆனாலும் அது நமது என்று ஆகிவிட்டது. இது முள்ளின்மேல் போட்ட சேலை போண்ர காரியம். சேலை கிழியாமல் எடுக்கும் வித்தைதான் வேண்டும்.

மாற்றுத் திட்டங்கள் பற்றி யோசிப்பதுதான் நல்லது. அல்லது அடுத்த பத்தாண்டுகளில் மது தயாரிப்பு நிறுத்தப்பட இப்போதே தயாராக வேண்டும்.

மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி கட்டுப்பாட்டு ஆணையில் ஒருவகை மதுச்சாரம் தயாரிப்பு தடை செய்யப்பட்டதாகச் செய்தி. ஆனால், அந்த மதுச்சாராம் தொடர்து விற்பனையில் இருந்தது. அது எப்படி?

மற்ற மதுச்சார நிறுவனங்கள் தயாரிப்பை நிறுத்தவில்லை. இது ஏன் என்று மதுப்பிரியர்கள் கேட்கின்றனர். பலவற்றுக்குப் பதில் இல்லாமல் இருக்கலாம். அதுபற்றிய வாதம் இல்லை. ஆனால் மது விற்பனை நிறுத்தப்பட்டால்  புது தயாரிப்புகள் கள்ளதனமாக உருவாகும் என்பதும். அதனால் உயிரிழப்புகள் கூடுதலாகும் என்பது  சர்வ நிச்சயம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here