அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’ உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் விஷ்ணு வர்தன். அதனைத் தொடர்ந்து அஜித்துடன் ‘பில்லா’ மற்றும் ‘ஆரம்பம்’ படங்களில் இணைந்தார். தற்போது இந்தியில் ‘ஷேர்ஷா’ (Shershaah) என்ற படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார்.
நான் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டிலும் இல்லை. இந்த இரண்டு பக்கங்களும் போலியானவை. யாரோ ஒருவர் என் பெயரில் அதனை தவறாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். எனவே இந்த பக்கங்களை பின்தொடராதீர்கள் என்று அவர் தெரிவித்து கொண்டார்.