குளவி கொட்டி 8 வயது சிறுமி மரணம்

கோலா  திரெங்கானு:  டுங்கூனில் உள்ள ஃபெல்டா கெர்டே 4 இல் நேற்று நடந்த  ஒரு சம்பவத்தில் குளவிகள் கொட்டி  ஆபத்தான நிலையில் இருந்த 8 வயது சிறுமி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துவமனையின் (எச்.எஸ்.என்.ஜெட்) தீவிர சிகிச்சை பிரிவில் அதிகாலை 1.30 மணியளவில் சிறுமி உயிரிழந்தார் என்று திரெங்கானு சுகாதார இயக்குநர் டாக்டர் நோர் அஸிமி யூனுஸ் தெரிவித்தார்.

65 குளவிகள் அச்சிறுமியை  கொட்டியதாக  நேற்று இரவு 9.17 மணியளவில் டுங்குன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குளவியினால்  ஏற்படும் நச்சுத்தன்மை காரணமாக  உள் உறுப்பு செயலிழப்பின்  காரணமாக அவர் இறந்தார். அவரின்  உடன்பிறந்தோர்  இருவரை  குளவிகள் கொட்டியதாக நம்பப்படுகிறது.

அவர்களது தாயார்  ரோஹாயு மாட் லாசிம் (வயது 39)  கூறுகையில்  இரு உடன்பிறப்புகளான நூர் நஜிஹா மொஹட் சப்ரி, 8, மற்றும் அவரது சகோதரர் முஹம்மது அசிப், 6 – மற்றும் அவர்களது மூத்த சகோதரி ஆகியோர் தங்கள் நண்பர்களுடம் ​​தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு மலையில் விளையாடிக் கொண்டிருந்தனர். பின்னர் வலி மற்றும் உடலில் வீக்கங்களுடன் வீட்டிற்குள் வந்ததாகக் கூறினார். முதலில் அருகிலிருந்த கிளினிக்கிற்கு அழைத்து சென்றதாகவும் அவர்கள் உடனடியாக அரசாங்க மருத்துவமனைக்கு செல்லுமாறு பணித்ததாகவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here