உத்தமர்கள் பேசட்டும், உரைக்க!

கூட்டரசு பிரதேசத்தில் மது விற்பனை இல்லை என்று அமைச்சர் அனுவார் மூசா கூறியிருக்கிறார். புதிய வழிகாட்டி முறைகள் தயாரிக்கும் வரை மதுச்சாரத் தயாரிப்பு, விற்பனை முடக்கம் செய்யலாம் என்ற அவரின் அறிக்கை பொதுவான மனித நியாயாமானது என்பதில் மாற்றுக்கருத்துகளே இல்லை.

நம்நாட்டில் மதுச்சாரம் தயாரிப்பு, விற்பனை தொடங்கி அரை நூற்றாண்டுகளுக்கு மேலாகிவிட்டன. அன்றிலிருந்து இன்றுவரை மதுத்சாரத் தயாரிப்பு பற்றிய பேச்சு வராமலில்லிலை. பேசப்படாமல் இல்லை. நடவடிக்கை எடுக்கப்பாடாமல் இல்லை. அவையாவும் நாட்டின் சூழல் கருதி செய்யப்பட்டவை.

எரிவதைப் பிடுங்கினால கொதிப்பது நின்றுவிடும் என்பார்கள். மதுச்சாரத் தயாரிப்பை நிறுத்தினால் விற்பனை இல்லாமல் போய்விடும். என்பதும் சுலபமான வழிதான். மது தாயாரிப்பை நிறுத்தினால் மாற்றுவழி ஒன்று உருவாகும் என்பதை அரசு அறியாமல் இல்லை. இது பற்றியெல்லாம் பேசப்படாமல்., ஆராயப்படாமல் இல்லை.

மது, எந்த மாநிலத்தில் தயாரிக்கப்படுகிறது என்பதும் முக்கியமல்ல. எங்கு அதிகமாக விற்கப்படுகிறது என்பதும் முக்கியமல்ல. மது போதையால் விபத்தும் இறப்பும் நடப்பதற்கு எது காரணம் என்று பச்சைக் குழந்தைக்கும் தெரியும். வாகனங்களே விபத்துக்கும் இறப்புக்கும் காரணமாக இருப்பதால் வாகனத் தயாரிப்புகளை நிறுத்த வேண்டும் என்றால் அரசாங்கம் அதைச்செய்யுமா? மலேசியக்கார்கள் விற்பனை ஊக்குவிக்கப்படுகின்றன என்றால் அது பொருளாதாரம், தொழில்நுட்பம் சார்ந்தது.

கார் பந்தயமும் உயிருக்கு மிரட்டல்தானே! அது அவசியமா? என்பது இதுவரை பேசப்படவில்லை. பந்தயத்தளம் விரிவாக்கம் பற்றி கருத்துகள் நிலவுகின்றன. கார், மோட்டார் சைக்கிள் பந்தயங்கள் தேவையில்லை. ஆனால் தேவை  இதுகூட ஒருவகை போதைதான்.

மக்கள் பொது வாகனங்களுக்கு மாறவேண்டும் என்று அரசு விரும்புகிறது. அதற்கான முயற்சிகள் இல்லை. பேச்சு மட்டுமே இருக்கிறது. பொதுப் போக்குவரத்தை அதிகமாக்கினால், அதற்கான விரிவாக்கத்தை உயர்த்தினால், குடிப்பவன் பொது வாகனங்களைப் பயன்படுத்திக்கொள்வான்.

மதுக்கடைகள் திறக்கும் நேரம்,  மூடும் நேரம் என்பது கட்டுப்பாட்டில் இல்லை. பின்னிரவு வரை மதுக்கடைகளைத் திறக்கச்சொல்லி மது விரும்பிகள் மகஜர் கொடுத்ததாக எங்கும் பேசப்படவில்லை. மதுப்பிரியர்களுக்காக, அவர்களைப் ஈர்ப்பதற்காக செய்யப்படுவது என்னவாம் ? பொருளாதாரம் தானே?

ஒன்றைதத் தடுப்பதற்குமுன், அறிக்கை மன்னர்கள் ஆவதற்கு முன், அதனால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றியும் சிந்திக்க வேண்டும்.

ஓர் உதாரணம் சொல்லலாம். பல ஆண்டுகளுக்குமுன் லூனாஸ் கெடா பகுதியில் பலர் கள்ள சம்சு அருந்தி இறந்தார்கள். அரசாங்க அனுமதியோடு தயாரிக்கப்படும் மதுச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டால் கள்ளத்தனம் அதிகமாகும். இன்னும் அதிகமானோர் இறப்பர்.

சிலர், ஆலோசனை வழங்கினர். ஆயுள் தண்டனை என்றார்கள். இறந்தவரின் குடும்பத்திற்கு என்பது விழுக்காடு தரவேண்டும் என்கிறார்கள்.

விபத்தில் மரணம் ஏற்படுத்தியவர் ஆயுள் தண்டனை பெற்றிருந்தால், 80 விழுக்காட்டைத் தருவது யார்? சிறையிலிருப்பவரின் குடும்பத்தார்க்கும் வழியில்லாத போது 80 விழுக்காடு எங்கிருந்து வரும். யார் கொடுப்பது?

விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஆயுள் தண்டனை என்பதைவிட, அவர் செய்த வேலை அல்லது தொழிலைத் தொடர்ந்து செய்ய அனுமதிப்பதோடு, அவரின் வருமானத்தி 30 முதல் 50 விழுக்காட்டை இறந்தவரின் குடும்பத்திற்கு வழங்குவது பற்ரி யோசிக்கலாம்.

விபத்தை ஏற்படுத்தியவருக்கும் குடும்பம் இருக்கிறது. தண்டனை காலம் முப்பது ஆண்டுகள் அல்லது ஆயுள் தண்டனை காலம் வரை இப்பணம் செலுத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கலாம்.

விபத்துக்குக் காரணமானவர் காவல்துறை, நீதிமன்ற கண்காணிப்பில் இதைச் செய்ய வேண்டும்.

மது அருந்தாத உத்தமர்கள் மட்டுமே மது பற்றிப்பேச முடியும் என்பதால், பொதுக்கருத்தை பொறுமையோடு சிந்தித்துப் பேசுக. அதில் நமது உறவுகளும் இருக்கலாம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here