புதிய மதுபான அனுமதிகள் வழங்குவதை தடைசெய்க என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அறிவித்திருக்கிறது. பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மக்களின் நலன் காக்கும் சங்கம் என்றால் அது மிகையில்லை.
பல வேளைகளில் மக்கள் நலன் காக்கும் சங்கமாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் இருப்பதால் அரசாங்கத்தின் காதுக்களுக்கு எட்டும் செய்தியை வழங்குவதில் முன்னோடியாக இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இதற்குக் கூடுதல் பலமாக ஒரு சிலவற்றைக் கூறுவதிலும் தப்பில்லை.
புதிய மதுபான அனுமதிகள் என்பதில் ஓர் அழுத்தம் இல்லை என்பதுதான் பொதுவான கருத்தாக இருக்கிறது. புதிய அனுமதிகள், பழைய அனுமதிகள் என்பதல்ல இப்போதைய குடி போதைப் பிரச்சினை.
குடிபோதை, அதனால் விபத்து, அதனால் மரணம். என்ற தொடர்கதையால் நீதி, சிறை என்று போய்க்கொண்டே இருப்பதை தடுக்கும் வழிகள் பற்றியதாக இருக்க வேண்டும்.
இங்கே, புதிய, பழைய அனுமதி என்பது முக்கியமல்ல. புதியவற்றிற்கான விண்ணப்பங்கள் எப்போதாவது காளான்கள் போல்வரும், அவ்வளவுதான்.
இருக்கின்ற அனுமதிகளில் மதுவிற்பனை அனுசரிகப்படும் விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதே முக்கியம்.
போதையில் பாதை மாறும் சம்பவங்கள் மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி காலத்தில்தான் அதிகம் இருந்தன என்று கூறப்படுகின்றன. அதற்கு முன்னும் இருந்தன என்றாலும் நெருக்கத்தில் ஏற்படுவதாக இல்லை.
அப்படியென்றால் இதற்கு மன அழுத்தம் மிகுந்திருப்பதே காரணம் என்பதும் தெளிவாக இருக்கிறது. மன அழுத்தம் காரணமாகவே பலர் மதுவருந்துவதாக குறிப்புகல் காட்டுகின்றன. இன்னும் சிலர் வேறுவகையில் போதைக்கு வசதி ஏற்படுத்திக்கொண்டு சாலைத் தடுப்பைத் தவிர்த்து தப்பித்தனர்.
இப்போது இதுவல்ல முக்கியம். போதைக்குக் காரணம் மருத்துவம் சார்ந்திருக்கிறது. மன நலம், மன அழுத்தம் இவை மருத்துவ ரீதியாக மனித உணர்வுகளுக்கு சவால் விடும் செயல். அதனால், மாற்றுவழியாக வேறோன்றை மனம் நாடுகிறது. இதில் பலர் பல விதம். சிலருக்கு மது, மாது, தனிமை என்றெல்லாம் இருக்கும்.
இப்படிப்பட்டவர்களுக்கு மதுபோதையே நேரத்தை விழுங்கிவிடுகிறது என்பது ஒரு பொருட்டல்ல. இதனால்தான் பின்னிரவு விபத்துகள் ஏற்படுகின்றன.
சாலைத்தடுப்புகள் இல்லாவிட்டால் விபத்து எற்பட்டிருக்காது. மோட்டார் சைக்கிள் ஓட்டிகளும் இரவு நேரத்தில் வீர சாகசத்தைக் காட்டியிருப்பார்கள்.
மது விற்பனை இல்லாவிட்டால் இரவு நேரம் வீட்டிலேயே கழிந்திருக்கும். அப்படியானால் மது விற்பனை, நேரம், திறந்ததிருக்கும் நேரம் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்பதும் முக்கியம்.
பார் போன்ற இடங்களில் வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்கு மாற்றுவழித்திட்டத்தையும் ஆராயலாம். இதற்கு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தக்க அலோசனையை சமர்ப்பிகலாமே!