வெளிநாட்டவர்களுக்கு முதலுதவி !

ஒரு நாட்டிலிருந்து ஒன்னொரு நாட்டுக்குச் செல்லும்போது மிகவும் ஆனந்தமாக இருக்கும். ஆனந்தம் ஆனந்தமாக இருக்கும்வரை ஆனந்தம் . இல்லையெனில் அதுதான் மிகத்துன்பமாக மாறிவிடும்.

சுற்றுலாவுக்கு ஏற்ற இடமாக இருப்பது மலேசியா என்பது அனைவருக்கும் தெரியும். மேலை நாடுகளிலிருந்து மலேசியா வருவதை விரும்பும் மக்களே அதிகம். அந்த வகையில் மலேசியா வந்தவர்கள் பலருக்கு பெருத்த சோகம் நேர்ந்திருப்பதால் உதவமுடியாமல் இருப்பதுதான் பெரும்சோகம்.

ஏன் இந்த நிலை என்பதில் எந்த விளக்கமும் தேவையில்லை. அவர்கள் கைப்பணமின்றித்தவிப்பதாகச் செய்தி. மிகவும் சிரமப்படுகின்றனர் .

தங்கள் சொந்த நாடுகளுக்குச் செல்ல முடியாமல் இருக்கும் அவர்களுக்கு அவரவர் நாடுகள், தூதரகம் என்ன செய்துகொண்டிருக்கிறது? இப்படித்தான் கேட்கத்தோன்றுகிறது.

குடிநுழைவு, விசா என்பது இத்தருணத்தில் பெரிதாக இல்லை. ஆனால் கைச்செலவுகளுக்குக் கையேந்தும் நிலைவராமல் இருக்கிவேண்டுமே ! விரைவில் அனுப்பும் வழிகள் இருந்தால் அதைத்தான் முதலுதவியாகச் செய்ய வேண்டும்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here