அரசியல் மீன்பிடிக்க ஜிஎல்சி இரையாம்!

மீன்பிடிப்பவர்களுக்குத் தெரியும் எந்த இரையைப்போட்டால்  மீன்கள் சிக்கும் என்று. இதில் அவரவர் அனுபவத்திற்கு ஏற்ப அபாரத் திறமைகளுடன் இருப்பார்கள். ஒரு சிலர் ஆபத்தான விஷமிகளாகவும்  இருப்பார்கள்.

குட்டை மீன்களைப்பிடிக்க முட்டைகளையும் பற்பசையையும் பயன்படுத்தியதையும் முகநூலில் அறிய முடிந்தது.

யார் எந்தத்துறையில் இருந்தாலும் அந்தத்துறையில் தீவிரமாக சிந்திக்கிறார்கள் என்பது புதிய கண்டுபிடிப்புகள் அல்ல. புது வழிகளில் தங்கள் ஆற்றலைப்பயன் படுத்தும் உத்திகளைக் கையாள்கிறார்கள் என்பதும் அரசியல் கணக்கில்தான் சேர்கிறது.

கூடுதலாக, கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பதுதான். அப்படிசெய்தால் பிள்ளையார் என்ன செய்வார்?

அரசியல் பதவிகளுக்கு வந்தவர்கள், தொடர்ந்து அதில் நிலைக்க வேண்டும். அதற்காக இருக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு பதவியைத் தக்க வைத்துக்கொள்வதும் சிறந்த மீன்பிடிப்புக்கு ஒப்பானதுதான்.

இந்த வகையில் அரசு தலையீடுள்ள ஜிஎல்சி நிறுவன பதவிகளைக் கடைவிரிக்கும் திறன் எல்லோருக்கும் அமைந்துவிடாது.

முன்னாள் அமனோ தலைவர்களை ஈர்க்க ஜிஎல்சி பதவிகளுக்கு முலாம் பூசப்பட்ட விவகாரம் இப்போது பூதாகரமாக முளைத்திருக்கிறது. இப்பிரச்சினையில் இன்றைய பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் குரல்போல்  பதிவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

குரலை வைத்து உரலை இடிப்பது சரியானதாக இருக்க முடியாது. குரல் ஒலியில் முஹிடீன் குரல்போல இருந்தாலும் இதிலும் தகடுதத்தங்கள் இருக்கலாம் என்ற சந்தேகமும் வலுவாக இருக்கிறது.

ஜிஎல்சியைக் கொடுத்து அம்னோ காரர்களை இழுக்கும் முயற்சியில் குரல்பதிவை ஆராயும்படி அமானா இளைஞர் பிரிவே புகார் செய்திருக்கிறதாம்!

பெர்சத்து வடிவிலும் கோவிட் -19 நுழைந்திருக்கிறது  என்று இதை ஒப்பிடும்போது, இதிலும் மக்கள்  நடமாட்ட கூடல் இடைவெளி கடைப்பிடிக்க வேண்டியிருக்கும் என்றும் நம்பலாமா?

கோவிட் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நேரத்தில், அரசியல் குத்தாட்டம் சூடு பிடித்திருக்கிறது. இறுதிசுற்றில் வெல்லப்போகிறவர் யாரு? என்ன அவர் பேரு?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here