பாகான் செராயில் மூன்று வயது குழந்தையைக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் தம்பதியருக்கு வரும் ஜூன் 9ஆம் தேதி வரை தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழந்தை இறந்த விவகாரம் தொடர்பில் இவ்விருவரும் கடந்த ஜூன் 1ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக தங்கள் குழந்தை கட்டிலில் இருந்து கீழே விழுந்ததாக அத்தம்பதியர் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.