தாய்மை என்பது தவம்

தாய், குழந்தை, தாய் என்று கூறிக்கொண்டே போனால் உலகம் என்ற வட்டதிற்குள் வந்துவிடும் . தாய்தான் முதலில்,  குழந்தைதான் தாயாகிறது. இந்த வட்டதிற்குள்தான் மனித சுழற்சியும், உயிர்களின் பிறப்புகளும் இருக்கின்றன.

மருத்துவனைகள் என்பது உயிர்களைக் காக்கும் புனித இடம். இந்த இடத்தில்தான் அரவணைப்பின் வாசம் அமலாக்கம் பெறுகிகிறது. அன்பின் வெளிப்பாடு குடும்பம் சார்ந்தது அல்ல. இது குவலயம் சார்ந்தது.

போர் மூண்டாலும் மருத்துவமனையின் மீது தாக்குதல் நடவாது. அப்படி நிகழ்ந்தால் அது தவறுதலாகக் கையாளப்பட்டிருக்கும். தவறு நேர்ந்திருக்கும். அதற்கும் விசாரணை உண்டு.

மருத்துவமனைக்குச் சிகிச்சை என்று வந்துவிட்டால் அதுதான் குடும்பம். வெளியேறும்வரை அதுதான் வீடு. அந்த வீட்டில் இருக்கும்வரை பாதுகப்புக்கும் பராமரிப்புக்கும் வேறு இடம் நிகராகாது.

மருத்துவமனை ஒன்றில், பிறந்த குழந்தைக்கு பால் கொடுக்கும் நிலையில் அன்னை இல்லை என்பதை தாதியர் உணர்ந்தார். அழத்தொடங்கிய அந்தப்பிள்ளைக்குப் பால் கொடுத்து பசி ஆற்றியிருக்கிறார்.

இதை, மனிதாபிமானம் என்ற சின்ன வட்டத்திற்குள் கட்டிப்போட்டுவிட முடியாது மற்றவர்களுக்கு மனிதாபிமானம் இல்லையென்று ஆகிவிடும். இத்தாததியரின் இந்தப் பரிவுமிக்க செயல் தெய்வத்தால் ஆகாதெனின் என்பதாகக் கொள்ளல் நன்றாம்.

இது, ஓர் உயிரின் பிறப்பல்ல. பிறப்பெடுத்த தெய்வத்துக்கு இன்னொரு தெய்வம் பால்கொடுத்திருப்பதால் அந்தக்குழந்தை ஞானக்குழந்தை ஆகியிருக்கிறது. அந்தத் தாதியரின் தாய்மைக்குணம் அக்குழந்தைக்கு பாலோடு ஊட்டப்பட்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

கோரோனா பாதிப்புகள் என்ற அச்சம் இருந்தும், அக்குழந்தையின் பசி ஆற்றல் என்பது தெய்வீகமானது.

ஒருவேளை தெய்வமே அந்தக்குழந்தை வடிவமாகப்  பிறந்திருந்தால், அந்தத்தாதி தெய்வப்பிறவி என்பதில் தவறிருக்க முடியாது. மனிதம் வாழ்ந்துகொண்டிருக்கிறது. அதற்கு ஆதாரம் கிடைத்திருக்கிறது. மனிதம் வாழ்ந்துகொண்டே இருக்கும். யாரும் நெருங்முடியாது. மருத்துவமனைபோல் தனித்திருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here