தேவையே சேவை என்பதல்ல அரசியல்

உணவருந்தும் நேரத்தில் பேசக்கூடாது என்பதற்கு உணவு ஜீரணமே காரணம் என்பதை மூத்தோர் கண்டுபிடித்திருக்கின்றனர். பெரியோர் காரணமில்லாமல் எதையும் கூறவில்லை.

அதுபோலத்தான் அரசியலும் என்பதற்கு சுல்தான் ஜோகூர் கூறிய வார்தை சான்றாக அமைந்திருக்கிறது.

இன்றைய நிலை அரசியல் பேசுவதல்ல. மக்களுக்கானது என்பதே அவரின் வாதம். சேவை தவிர்த்து தேவை பற்றிய வாதம் அதிகரித்தால் மாநில அரசியல் கழன்றுவிடக்கூடும் என்று எச்சரித்திருக்கிறார்.

எதைச் செய்யவேண்டுமோ அதைத்தான் செய்யவேண்டும். அதுதான் உண்மையான அரசியல். காட்டில் நிலவு காய்ந்தால் கடலுக்குக் கொண்டாட்டமாக இருக்கலாம். மக்களுக்கு என்ன நன்மை?

வேலையிழப்பு, வருமானம் குறைவு, என்றெல்லாம் மக்கள் சிரம கதியில், இயங்கும் போது அரசியல் என்பதை எற்கமுடியாது என்ற அவரின் கோபத்தில் மக்களின் நியாயம் பெரிதாய் இருக்கிறது.

ஜோகூர் மாநிலத்தில் மோசமான அரசியல் பேச்சுக்கே இடமில்லை என்கிறார் அவர். மக்களுக்கும் மாநிலத்திற்கும் மகத்தான சேவை செய்வதாக சத்தியப்பிரமானம் செய்தது தலைகீழாகிவிட்டது. சதா அரசியல்மாற்றச் சிந்தனையால் மக்கள் நலம் கவனிக்கப்படுவதில்லை.

இப்படியே தொடர்ந்து நடந்தால் ஆட்சி கலைப்பு தானாகவே நடந்துவிடும் என்று ஜோகூர் சுல்தான் அரசியல் வாதிகளை எச்சரித்திருக்கிறார். இது, ஜோகூர் மக்கள் மீது அவருக்குள்ள தனித்தன்மையை உணர்துவதாக இருக்கிறது.

இப்போது அரசியல் பேசும் நேரமல்ல. மக்கள் நலம் பேணும்  காலம். அரசிலைத் தொடுவதற்கான காலம் கனியவில்லை என்கிறார் சுல்தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here