சுங்கைப் பட்டாணியில் பெண் ஒருவரின் சடலம் வாய்க்காலில் கண்டெடுப்பு

சுங்கைப் பட்டாணியிலுள்ள பாக்கர் ஆராங், தாமான் பெர்பாடுவானில் உள்ள ஒரு வீட்டின் பின்புறமுள்ள வாய்க்காலில் நேற்று மதியம் உள்ளூர்வாசி என நம்பப்படும் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

நேற்று மாலை 5.47 மணியளவில் பொதுமக்களிடம் இருந்து சடலம் கண்டெடுக்கப்பட்டது குறித்து காவல்துறைக்கு அறிக்கை கிடைத்தது என்று கோலமுடா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் ஜைடி சே ஹாசன் கூறினார்.

“காவல்துறையினர் உடனே அவ்விடத்திற்கு விரைந்ததாகவும், குறித்த சடலம் உள்ளாடைகள் இல்லாமல் பேட் சட்டை மட்டுமே அணிந்திருந்தது என்றும் கூறப்படுகிறது.

முதற்கட்ட விசாரணையின் விளைவாக, வீட்டின் பின்புறத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக சாட்சிக்காரர் கூறினார். முதலில் கழிவறையில் இருந்து நாற்றம் வருகிறது என நினைத்து தனது வீட்டில் உள்ள கழிவறையை கழுவி பார்த்தார், ஆனால் துர்நாற்றம் இன்னும் போகவில்லை. சாட்சி தனது வீட்டின் பின்பக்கக் கதவைத் திறந்து பார்த்தபோது, ​​சாக்கடையில் ஒரு பெண்ணின் சடலத்தைக் கண்டார்,” என்று அவர் கூறினார்.

கெடா காவல் படைத் தலைமையகத்தின் தடயவியல் பிரிவு சம்பவ இடத்தில் பரிசோதனையை மேற்கொண்டதாகவும், அந்தப் பெண்ணின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் ஜைடி மேலும் கூறினார்.

சம்பவத்தை நேரில் கண்ட எவரும் அல்லது குடும்ப உறுப்பினரை இழந்த எவரும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க முன்வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், தற்போது பிரேதப் பரிசோதனை முடிவுகள் நிலுவையில் உள்ள நிலையில் இந்த வழக்கை திடீர் மரணம் என போலீசார் வகைப்படுத்தியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here