விஜய் நடிப்பில் வெளியான படம் தெறி. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். ஜிவியின் 50வது படமாகும். இப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று புதிய சாதனை படைத்துள்ளது.
இப்படத்தில் இடம்பெற்ற உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே’ என்ற பாடல் யூடியூபில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பாடல் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்றும் இந்த பாடலுக்கு உரிய மரியாதையை அளித்த பார்வையாளர்களுக்கு தனது நன்றியையும் அவர் தெரிவித்துள்ளார்.


















