சானிட்டைசரை கோயில்களில் அனுமதிக்க மாட்டோம்

ஜூன் 8ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்கவும் அனுமதி அளித்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக, மத வழிபாட்டு தலங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாராத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சரீர விலகலை கடைபிடிக்கும் பொருட்டு வழிபாட்டு தலங்களுக்கு வருபவர்கள் 6 அடி இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தொற்றை தவிர்க்கும் பொருட்டு முகக்கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். சானிடைசர்கள், சோப்புகள் இருப்பதை வழிபாட்டு தலங்கள் உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் உள்ள பிரபல கோயிலான மா வைஷ்னவதம் நவ் துர்கா கோயிலை சேர்ந்த
பூசாரி சந்திரசேகர் திவாரி, “மத்திய அரசு கூறியுள்ளபடி கோயில்களில் சானிட்டைசர்களை அனுமதிக்க முடியாது. அதில் ஆல்கஹால் உள்ளது” என்று கூறி அதிர்ச்சியடைய செய்துள்ளார்.

கோயில்களுக்கு மது அருந்தி விட்டு செல்லாத நிலையில், எப்படி ஆல்கஹால் இருக்கும் சானிட்டைசர்களை அனுமதிக்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வேண்டுமானால் கோயில்களுக்கு வெளியே சானிட்டைசர்கள், சோப்புகளை வைத்து கொள்ளலாம் எனவும் அவர் யோசனை தெரிவித்துள்ளார்.

சானிட்டைசர்களில் உபயோகப்படுத்தப்படும் ஆல்கஹாலுக்கும், மது வகைகளில் உபயோகப்படுத்தப்படும் ஆல்கஹாலுக்கும் வேறுபாடுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here