அந்நியத்தொழிலாளர்கள் அப்புறப்படுத்தப்படும் காலம்

அந்நியத்தொழிலாளர்களின் தேவைகள் படிப்படியாகக் குறைக்கப்பட வேண்டிய அவசியத்தை கொரோனா உணர்த்தியிருக்கிறது இருக்கிறது.

இனியும் அந்நியத்தொழிலாளர்களின் தேவை என்றிருந்தால் சுயதிறன் வலுவிழந்து போய்விடும் என்ற அச்சம் நிலவுகிறது.

அந்நியத்தொழிலாளர்களின் மூலம் உள்நாட்டு பொருளாதாரம் பலவீனமடைந்திருக்கிறது என்பதை இனியும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இது தொடருமானால் மலேசியர்களின் சுயதிறன் வெறும் சொப்பனமாகவே இருக்கும்.

மலேசியர்கள் இன்னும் தயாராகவில்லை என்பதில் எந்தவித அர்த்தமுமில்லை. பலகாலமாக மலேசியர்கள் உள்ளூர் வேலை காலி இடங்களை நிரப்புவதில் அக்கறை காட்டவில்லை என்பது தெளிவான செய்தியாகும்.

கோவிட் -19 இச்சிந்தனையை மாற்றியமைத்திருக்கிறது. கோலாலம்பூர் அருகில் உள்ள செலாயாங் சந்தை ஒரு முன்னுதாரணமாக இருந்திருக்கிறது.

அந்நிநியத் தொழிலாளர்களால்தான் ஆபத்து அதிகமாகியிருக்கிறது என்பது மிகப்பெரிய காரணம் மட்டுமல்ல. அவர்கள் எவ்வித தடையுமின்றி ஏகபோக வாழ்க்கையை அனுபவித்து வந்தார்கள் என்பதும் ஒரு காரணம்.அவர்களில் பெரும்பான்மையினருக்கு எவ்வித பத்திரங்களும் இல்லை. இருந்தாலும் அவர்கள் கவலைப்பட்டதாகவும் இல்லை. இதற்கு என்ன காரணம்?

காரணம் எதுவாகவும் இருக்கலாம். இனி அப்படியிருக்க முடியாது. மலேசியத் தொழில்களை நிரப்ப மலேசியர்கள் முன் வராவிட்டால் மலேசியர்கள் அனாதைகள் போல் ஆகிவிடுவார்கள்

மலேசிய நாட்டுத் தொழில்துறைகளும் தொழில்நுட்பமும் மலேசியர்களின் கையில் என்றால்தான் உலக நாடுகளின் பார்வை திரும்பும். அந்தப்பார்வை வருவதற்கு எந்தத்துறை என்றாலும் எதிர்கொள்ளும் பக்குவம் இருக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here