காலத்தை வெல்ல காகிதம் போதும்

காலத்தைப்போல் மனிதனுக்கு உதவும் தோழன் உலகில் இல்லை என்பது விளையாட்டான வார்தையல்ல. ஆயிரமாயிரம் அர்த்தங்கள் பொதிந்த வார்த்தையாக காலம் இருப்பதை எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாது. இதைப் புரிந்துகொள்ள பட்டப்படிப்பும் தேவையில்லை. ஒன்றே ஒன்று போதும். காலத்தைச் சரியான வழியில் எப்படிப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதுதான் அது.

காற்று அடிக்கும்போது மாவு விற்பதா? மழையடிக்கும்போது உப்பு விற்பதா? இதுபோலத்தான் அனைத்தும். காலமறிந்து செய்வதுதான் புத்திசாலித்தனம். இதற்கு பெரிய படிப்பு தேவையில்லை. அனுபவ அறிவு மட்டுமே தேவை என்பதை பலர் நிரூபித்திருக்கிறனர்.

சின்ன அறிவுக்கு பெரிய ஆற்றல் இருக்கிறது என்பதை உணர்வதே அறிவுதான். ஒன்றை அறிந்துகொண்டால் அதன் பயன் பெரியது. இதை அறிந்தவர்கள். காலத்தைப் பயன் படுத்துகின்றார்கள், சரியான காலம் சிறந்த நண்பன். காலம் அறிந்து செய்கின்ற காரியங்கள் வெற்றியடைகின்றன. வெற்றியடந்திருக்கின்றன.

விதைக்கும் காலத்தில் மழை வேண்டும். வெய்யில் அடிக்கும் காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவு புகட்டும்.

காலத்தைப் பயன்படுத்திக்கொண்டவர்கள் வெற்றியடைந்திருக்கின்றனர். வெற்றியடையவில்லை என்றதும் காலம் சரியில்லை என்பதில் அர்த்தமில்லை. சரியான காலத்தில் சரியான ஒன்றைத் தேர்வு செய்யவில்லை என்பது யாருடைய தவறு. தவற்றைச் சுட்டும்போது கட்டைவிரல் நம்மை நோக்கித்தானே திரும்புகிறது..

காலத்தைப் புரிந்துகொண்டால் அதுதான் சரியான தருணத்தைக் கொடுக்கும் என்பதை உணர்ந்து செயல்பட்டிருக்கிறார் ஒரு பட்டதாரி.

கட்டடக் கலைத்துறை கவிழ்ந்து கிடக்கிறதே என்று அவர் அஞ்சவில்லை. கற்பனையால்,  நல்ல சிந்தனையால் அதை எழுப்ப முடியும் என்று அவர் நம்பினார். அவருக்குத் தடையாக இருந்தது வெட்கம். அதை ஒரு பக்கம் ஒதுக்கிவைத்தபோது காலம் கைகொடுத்ததது.

இந்த நேரத்தில் அடுக்குமாடி வீட்டுலுள்ள மக்களின் சிரமங்களில் குப்பை அகற்றுவது பெரும் சங்கடமக இருந்தது. அதையும் தொழிலாக மாற்றியது காலம்.  காற்றிலும் இருக்கிறது தொழில். பழச்சாற்றிலும் இருக்கிறது தொழில். இது கொரோனா காலம் . தீயதிலும் நன்மை விளைந்திருக்கிறது. குப்பையிலும் இருக்கிறது தொழில்.இதையும் உணரவைத்தது காலம். இது இக்காலம்.

அப்பெண் இத்தருணத்தைத் தொழிலாக மாற்றினாள். மாற்றத்தைக் காலம் உணர்த்தியது.

மாற்றம் அருகில் இருக்கிறது. அது கண்ணில் படுவதற்கும் காலம் தேவை. இதைத்தான் நேரம் என்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here