குடும்ப மகளிர் குழந்தையாகிவிடக்கூடாது

பெற்ற குழந்தைகள் பெருந்தவச்செல்வங்கள் என்பதும் அவர்களின் பாதுகாப்பும் முக்கியம் என்பதில் குடும்ப மகளிர் கவனக்குறைவாக இருக்கக்கூடாது என்பது கட்டளையல்ல. கடமையென்று உணர்த்தப்படுகின்றனர்.

குடும்பப் பிரச்சினைகளால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றன என்று ஆய்வுகள் காட்டுகின்றன. இதில் விவாகரத்தும் அதனால் ஏற்படுகின்ற பிரச்சினைகளில் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றன என்பதும் பழைய செய்தியாக இருந்தாலும் அதன் தொடர்ச்சி இன்னும் ஓயவில்லை என்று ஆகிவிட்டது.

அண்மைச் சம்பவம் ஒன்று எச்சரிகையாக இருப்பதை உணரமுடியும். எண்ணெய் நிலையத்தில், ஒரு காரின் கதவுகள் தானே பூட்டிக்கொண்டன. ஒரு வயது நான்கு மாதமே ஆன பெண்குழந்தையொன்று காரில் விடப்பட்டபோது தானியங்கி கதவு பூட்டிக்கொண்டதில் தாயார் அதிர்ச்சியடைந்ததாகச் செய்தி.

இதுபோன்ற சம்பவங்கள் இப்போதெல்லாம அதிகமாகி வருகின்றன. வீட்டிலேயே காரால் மோதப்பட்டு இறந்த குழந்தைகளும் உண்டு. இப்படி நடப்பதற்குக் காரணங்கள் கொட்டிக் கிடக்கின்றன. மன நிலை. தொழில், வருமானம், குடும்பம், நேரம், அவசரம், பதட்டம் என்றெல்லாம் பட்டியல் நீண்டுகொண்டே போகின்றன.

காரில் குழந்தை சிக்கிக்கொள்வது என்பது சாதாரணமானது அல்ல. உயிர் தொடர்புடைய செயல். பல வேளைகளில் காரில் குழந்தை விடப்படுவதை குழந்தையே விரும்புவதில்லை. அப்போதெல்லாம் சிறுகுழந்தை மிரட்சியோடு பயந்த நிலையில் இருப்பதை பார்த்திருக்கலாம். குழந்தைக்குத் தனிமை பிடிக்க வில்லை என்று அர்த்தமாகும்.

குழந்தையை காரில் அமரவைத்துவிட்டு பிற அலுவல்களைக் கவனிக்கும்போது, குழந்தை உணர்வே இல்லாமல் மறந்து போய்விடுதுண்டு. வீட்டிலேயே இப்படி நடந்துவிடும். காரில் குழந்தை இருப்பது பெரும்பாலும் மறந்து போய்விடுவதால். பல அசம்பாவிதங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

ஓர் ஆசிரியர் தன் குழந்தையை காப்பகத்தில் விட மறந்து, பள்ளிக்கூடத்திற்குச் சென்றிருக்கிறார். காரில் உறங்கிக்கொண்டிருந்த குழந்தையை மறந்துவிட்டிருக்கிறார். அக்குழந்தை இறந்திருப்பதை அறியாமல் பாடத்தில் கவனம் செலுத்தியிருக்கிறார். இதற்கெல்லாம் மன உளைச்சல்தான் காரணம் என்பதற்கு விளக்கங்கள் தேவையில்லை.

மனநலப்பிரச்சினையின்போது குழந்தையை தனியே காரில் விட்டுச்செல்லாமல் இருக்கவேண்டும். இது போன்ற சமயத்தில் யாரையேனும் துணைக்கு அழைத்துச் செல்லவும் யோசிக்கக்கூடாது. பயன்படுத்தும் காரின் இயக்கம் பற்றியும் முதலுதவி குறித்தும் குடும்ப மகளிர் நன்கு தெரிந்திருக்க வேண்டும். இதில் குழந்தைத்தனம் அறவே கூடாது. குடும்பப் பிரச்சினைகள் எழும் நேரத்தில் பிள்ளைகளே கவனத்தில் முதன்மையாகவும் நிதானமாகவும்  இருக்க வேண்டும். பிரச்சினகளின்போது குழந்தைகல் மீதான கவனம் இல்லாமல் போகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here