உயிரின் விலை

யானையை வெடி வைத்துக் கொன்றிருக்கிறார்கள் என்பது செய்தி. இந்ததச் செய்தி உண்மையா என்ற சந்தேகமும் எழாமல் இல்லை. அடுத்து, பசுவதை. பசு மாட்டின் வாயில் கோதுமை வெடி வைத்து உயிரைப்பறித்த செய்தியும் வந்திருக்கிறது. காரணம் அறியப்படவில்லை.

இன்னும் தொடரும் என்றும் பேசப்படுகிறது. உயிர்வதைக் கொலை கலையாக மாறிவருகிறதோ என்ற அச்சமும் அதிகாமாகிவிட்டது.

தெய்வம் என்ற இடத்தில் யானை மதிக்கப்படுகிறது. பசுவும் அப்படித்தான் இருக்கிறது. யானையும் பசுவும் மனிதர்களுக்குத் தீங்கிழைக்காதவை.

சில வேளைகளில் யானைக்கு மதம் பிடிக்கும் என்பார்கள். ஆனாலும் எந்த மதமும் அதற்குத் தெரியாது. அதற்கு மதம் பிடித்துவிட்டது என்று மனிதன் கூறுகிறான். அது என்ன மதம் என்று மனிதனுக்கே தெரியாது.

மதம் என்பதை ஆவேசம் என்ற தொனியில் மனிதன் மொழி பெயர்த்திருக்கிறான். ஆவேசத்தை மதம் என்றால் ஆவேசப்படுவது மனிதனாகவும் இருக்கிறான். ஆவேசப்படுகின்ற மனிதன் மதத்தை நேசிப்பது ஏன்? ஆவேசப்படுவதற்காகவா என்ற ஐயமும் எழுகிறது.

மனிதனுக்கு மதம் பிடித்திருக்கிறது என்பதுதான் உண்மை. யானைக்கு எப்படி பிடித்தது.

மனிதன் யானைக்குத் தீங்கிழைப்பதுதான வழக்கம். யானை மனிதனுக்குத் தீங்கிழைத்திருப்பதாகக் கருதிய மனிதன், அதை அழிக்க முற்பட்டிருக்கிறான் என்பது மதத்தின் கொள்கை என்றால், மனிதனைக் காட்டிலும் மிருகங்களை நகர்ப்பகுதிகளிலும் அமர்த்தும் திட்டத்தைப் படிப்படியாக செயல்படுத்தலாம்.

மனிதன் திட்டமிட்டு அழிப்பான். மிருகங்கள் தனக்குத் தேவைப்படும்போது உணவுக்காக அழிக்கும். அந்த அழிப்பு மனிதனுக்குப் பாதகமாக மாறும்போது அவேசம் என்ற மதத்துக்கு மனிதன் தாவிவிடுகிறான்.

மிருக வதைகளுக்கும் சட்டம் பாயும். அதன் பாய்ச்சல் ஆவேசமாக இருக்கும். அதற்கென்றும் துறை இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here