சொக்காட்டான் விளையாட்டு சோம்பல் முறிக்கிறது!

சொக்கட்டான் விளையாடு சோமபல் முறிப்பதுபோல் சின்ன சின்ன அறிவிப்புகளும் பல் குத்த உதவும் என்ற பிரதமரின் அறிவிப்பு ஒரு முன்னேற்றகரமான நகர்வின் காய் நகர்த்தல் என்று வர்ணிக்கப்படிருக்கிறது.

முன்னைய இறுக்கம் சற்று தளர்த்தப்பட்டிருக்கிறது. இந்தத்தளர்வினால் கூடுதல் உற்சாகம் பிறந்திருப்பதாக மக்கள் உணர்கின்றனர். படுத்துக் கிடப்பவன் எழுந்து நடக்க முடியும் என்ற ஆர்வம் பிறந்திருக்கிறது.

பரிட்சையில் அடுத்த கட்ட முயற்சி இது. முயற்சியின் அடுத்த கட்டம் சூழ்நிலையைப் பொறுத்திருக்கிறது. அந்தச்சூழ்நிலையை உருவாக்க வேண்டிய பொறுப்பில் மக்கள் இருக்கிறார்கள்.

உள்ளூர்சுற்றுலாவுக்கு  ஊட்டச்சத்து வழங்கப்பட்டிருக்கிறது என்பதில் விடுதிகள் புருவம் உயர்த்துகின்றன.சூரிய ஒளிக்கதிர்கள் உள்ளே வர சன்னல்கள் திறக்கப்படுகின்றன.

சொக்காட்டான் ஆட்டம் நிறைவு பெறவில்லை. கொரோனா தோற்கும் என்பது மட்டும் உறுதி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here