ஜெயலலிதாவின் துணிச்சலும், உண்மையான குயின் போல் அவர் இருந்ததும் எனக்கு பிடிக்கும் – ரம்யா கிருஷ்ணன்

இயக்குனர் கவுதம் மேனன், பிரசாந்த் முருகேசனுடன் இணைந்து இயக்கிய வெப் தொடர் குயின். இதன் முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். நடிகையாக இருந்து ஆளுமைமிக்க அரசியல்வாதியாக உயரும் ஒரு பெண்ணின் கதை தான் குயின். மேலும் இது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதை என்று சொல்லப்பட்டது. அதேபோல் தான் இத்தொடரில் இடம்பெறும் ரம்யா கிருஷ்ணனின் ஷக்தி சேஷாத்ரி கதாபாத்திரமும் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

ஆனால் இது ஜெயலலிதாவின் வாழ்க்கைக்கதை இல்லை என நடிகை ரம்யா கிருஷ்ணன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் இது அனிதா சிவகுமார் என்பவர் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் வெப் தொடர். ஜெயலலிதாவின் கதையைப் போல ஒத்து இருந்ததால் இந்தத் தொடர் எனக்கு மிகவும் பிடித்தது. எனக்கு ஜெயலலிதாவின் துணிச்சலும், உண்மையான குயின் போல் அவர் இருந்ததும் மிகவும் பிடிக்கும்.

கதைப்படி இன்னும் அந்தக் கதாபாத்திரம் முழு அரசியல்வாதி ஆகவில்லை. முதல் பாகத்தில் அவர் அந்த நிலை வரை செல்கிறார். இன்னும் 2ஆம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை. அதில் பங்கேற்க நான் ஆர்வமாக இருக்கிறேன் என்று அவர் கூறினார். இன்னும் அதிக ஆக்‌ஷன், பரபரப்பான காட்சிகள் இந்த 2ஆம் பாகத்தில் மக்கள் எதிர்பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here