யானை கொல்லப்பட்டது எப்படி? தேங்காய்க்குள் வெடிமருந்து

கேரளாவில் வெடிமருந்து வைத்து கர்ப்பிணி யானை கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட வில்சன் என்பவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கேரளா மன்னார்காடு பகுதியில் உள்ள வெள்ளியார் நதியில் கடந்த 27ஆம் தேதி கர்ப்பிணி யானை வெடிவைத்துக் கொல்லப்பட்டது.

இது தொடர்பில் வில்ங்ன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த யானையைத் திட்டமிட்டுக் கொல்லவில்லை எனவும் வயலில் வைத்த பொறியில் அது சிக்கிக் கொண்டது எனவும் அவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

வில்ங்ன் வேலை பார்க்கும் வயலில் பன்றித் தொல்லை அதிகம் இருந்தது. பன்றிகளைக் கொல்வதற்காக வில்சன் பொறி வைத்திருக்கிறார். அவருடன் மேலும் இருவர் சேர்ந்து இந்தப் பொறியை வைத்தனர்.

இவர்கள் அன்னாசிப் பழத்தில் பொறியை வைக்கவில்லை. மாறாக தேங்காயில் பொறியை வைத்து இருப்பதும் தெரிய வருகிறது. தேங்காய் உள்ளே வெடியை வைத்து அதைப் பன்றி சாப்பிட்டதும் வெடிப்பதுபோல் பொறி வைத்திருந்தார்கள்.

பன்றிக்கு வைத்த பொறியில் அந்தக் கர்ப்பிணி யானை சிக்கி விட்டது எனவும் திட்டமிட்டுச் செய்யவில்லை எனவும் வில்சன் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
யானையின் உடலில் பரிங்ோதனை செய்யப்பட்டபோது அதன் வாயில் வெடிமருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதன் வயிற்றில் எங்கும் அன்னாசிப்பழம் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here