டெல்லி, பிரிக்ஸ் உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுதினம் என 2 நாட்கள் நடைபெற உள்ளது.
பிரிக்ஸ் கூட்டமைப்பு
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை கொண்ட கூட்டமைப்பாக பிரிக்ஸ் என்ற கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த கூட்டமைப்பில் எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 6 நாடுகள் உறுப்பினர்களாக இணைந்துகொண்டன. இதையடுத்து, பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்தது.
பிரிக்ஸ் அமைப்பில் பெலாரஸ், பொலிவியா, கியூபா, கஜகஸ்தான், மலேசியா, நைஜீரியா, தாய்லாந்து, உகாண்டா, உஸ்பெகிஸ்தான் மற்றும் வியட்நாம் ஆகியவை இணைப்பு நாடுகளாக உள்ளன.














