காட்சிகள் மாறும் காலம்!

நாட்டின் ஆட்சி நடத்தப்படவில்லை. அது, தானே இயங்கும் புதிய ரயில் வண்டிபோல் இயக்கிக் கொண்டு நகர்ந்துண்டிருக்கிறது. இதை என்னவென்று கூறுவது. யாரால் இயக்கப்படுகிறது என்பதெல்லாம் மக்கள் அறிந்த ஒன்றுதான்.

இன்றைய பிரதமர் வியூகங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு தன்வழி தனிவழியென்று போய்க்கொண்டிருக்கிறார். இதற்கு தனி சாமர்த்தியம் வேண்டும். தைரியமும் வேண்டும். ஒரு கிராமிய பாடல்வரிகள் நினைவுக்கு வருகிறது.

சொல்லு புள்ளே! யாரு யாரு பேசறாங்க, என்னவெல்லாம் பேசறாங்க  இப்படித்தான் அந்தப் பாடல் போகும். அதுபோலத்தான் பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் யாரு யாரு பேசறாங்க என்றபவாறு போய்க்கொண்டிருக்கிறார்.

இப்போது அவர் காட்டில் மழை. இந்த மழைக்குக்க் காரணம் கோவிட் -19. அவராகவே பிரதமர் ஆவராகவே முடிவெடுக்கிறார். மிகவும் அசாதாரணமாக துணைப்பிரதமர் நியமனம் இல்லையென்றார். அதிலும் மறு கேள்விகள் இல்லை. இது சாதுர்யம்.

கேள்விக்கணைகள் வந்தாலும் எல்லையத் தொடமுடியவில்லை.  வேலிக்கு வெளியே பேசும் பேச்சாகவே அனைத்தும் அணைந்து போய்விடுகிறது.

இந்த வேளையில் துன் டாக்டர் மகாதீர் முகமது டத்தோஶ்ரீ அனுவார் இப்ராஹிம்  இணைந்து அரசியல் நடத்தினால் மீண்டும் நம்பிக்கைக் கூட்டணி தலை தூக்கலாம் என்று ஒருதரப்பு உசுப்புகிறது.

அரசியலில் எதிரியும் இல்லை. நண்பனும் இல்லை என்பதற்கு நல்ல உதாரணமே இவ்விருவரும்தான். இவர்கள் நண்பர்களாக மாறுவதற்கு இடம் கொடுத்தவர் டத்தோஶ்ரீ நஜீப் . இவரை எதிர்க்கத்தான் இருவரும் இணைந்தனர். இணைவதற்கு முன் டத்தோஶ்ரீ அனுவார் பிரதமராக வேண்டும் என்பது வெறும் வார்த்தையாகிவிட்டது. இதை நிறைவேற்ற அவர் தவறி விட்டார் என்ற மனக்குமறலும் தடுமாற்றமும் அரசியல் புரட்சியாகிவிட்டது.

காலத்தோடு நடக்க வேண்டியவை காலாவதியானதற்கு துன் டாக்டர் மகாதீரே காரணம் என்ற மக்களின் கோபமே டான்ஶ்ரீ முஹிடின் பிரதமராக இருக்க தானியங்கி செயல்படுகிறது. கொரோனா அதற்காக கையொலி எழுப்பிக்கொண்டே இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here