சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய வரலட்சுமி

கொரோனா அச்சுறுத்தலால் தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பணிக்காக சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர்.

இதற்காக மத்திய, மாநில அரசுகள் ரயில்கள், பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளன. ஆனாலும் இதில் இடம்கிடைக்காத தொழிலாளர்கள் நடைபயணமாகவும், சைக்கிளிலும் சொந்த ஊருக்கு திரும்பி செல்கின்றனர்.

இந்நிலையில் சென்னை உட்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நடிகை வரலட்சுமி சரத்குமார், உணவு, தண்ணீர், முகக்கவசங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார். தான் தொடங்கிய சேவ் சக்தி அமைப்பின் மூலம் தொழிலாளர்களுக்கு அவர் இந்த உதவிகளை வழங்கினார். அப்போது அவரது தாயார் சாயா தேவி மற்றும் சேவ் சக்தி அமைப்பின் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here