டிபிஎஸ்-இல் பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக பெண் புகார்

TBS பேருந்து நிலையத்தில் ஒரு பெண் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்த பதிவு குறித்து செராஸ் காவல் நிலையப் பொறுப்பாளர் (OCPD) உதவி ஆணையர் முகமது ரோஸ்டி தாவுதிடம் கேட்டபோது, ​​மார்ச் 18 அன்று புகார் அளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மேலும், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட ஆண், அப்பெண்ணுக்குத் தெரியாதவர் என்றும், இந்த விவகாரம் இன்னும் விசாரணையில் உள்ளது என்றும் அவர் கூறினார். அந்த சமூக ஊடகப் பதிவில், பாதிக்கப்பட்ட பெண், அந்த நபர் தன்னைத் துன்புறுத்தியதாகவும், தன்னிடம் ஆபாசமான கருத்தைத் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here