தேசிய மிருக காட்சி சாலை உட்பட பல மாநிலங்களில் செயல்பட்டு வரும் மிருக காட்சி சாலைகள் நாளை முதல் இயங்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை கூடிய பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பேசப்பட்டது. அதில் மிருக காட்சி சாலைகளை திறப்பது குறித்தும் பேசப்பட்டது என்று தற்காப்பு துறை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சபரி யாக்கோப் தெரிவித்தார்.
ஆனால் அரசாங்கம் விதித்திருக்கும் அனைத்து நிபந்தனைகளையும் அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
இசை கற்கும் பள்ளிகள் இயங்குவதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படாத நிலையில் கலை கலாச்சார மையங்கள் இயங்குவது குறித்து சுற்றுலா, கலை கலாச்சார அமைச்சுடன் கலந்து பேசி வரும் வியாழக் கிழமை அறிவிப்பு வழங்கப்படும் என்று அவர் கூறினார்.