போலீஸ் அதிகாரிக்கு மிரட்டல் – குற்றச்சாட்டை மறுத்தார் ஆடவர்

லான்ஸ் கோப்ரல் பதவி வகிக்கும் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு தொலைப்பேசி மூலம் உன்னை கொன்று விடுவேன் என மிரட்டியதாக தாம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை கார் இழுக்கும் பணி புரியும் ஆடவர் ஒருவர் மறுத்தார்.

கடந்தாண்டு ஜூலை 21ஆம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று காலை கோலகுபு பாரு நீதிமன்றத்தில் நடைபெற்றது. 6 பிள்ளைகளுக்கு தந்தையான அவர் தமக்கு வழக்கறிஞர் இல்லை எனவும் இக்குற்றத்தை தாம் புரியவில்லை எனவும் நீதிபதியிடம் தெரிவித்தார்.

அவர் மீது ஜூலை 21, 2019 அன்று இரவு 10.46 மணியளவில் உலு சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள உலு பெர்னாம் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொள்ளாத அந்த ஆடவர் விசாரணை கோரினார். மேலும் இவ்வழக்கில் தமது சார்பில் வழக்கறிஞரை நியமிக்க கால அவகாசம் கேட்டார்.

குற்றஞ்சாட்டப் பட்டவரின் மேல்முறையீட்டை கேட்ட பின்னர் நீதிபதி நூருல் மர்டியா முகமட் ரிட்ஸா, அந்த ஆடவருக்கு 5,000 வெள்ளி மற்றும் தனி நபர் ஜாமீன் வழங்கினார். ஆனால் தம்மால் 5,000 வெள்ளியை செலுத்த முடியாது என ஜாமீன் தொகையை குறைக்கும் படி அந்த ஆடவர் கேட்டுக் கொண்டர். அதன் பின்னர் அவருக்கு 2,000 வெள்ளி ஜாமீன் வழங்கப்பட்டது. அதோடு ஜூலை 21ஆம் தேதி வழக்கறிஞரை நியமித்து வழக்கின் ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here