சுற்றுலா சுகவீனமாகிவிடக்கூடாது!

நடைமுறை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும்  மக்களின் முதல் எண்ணமே சுற்றுலாவாகத்தான் இருக்கிறது. சுற்றுலா என்றதும் குதூகலகற்பனை உருவெடுத்து தூங்க விடாமல் செய்துவிடும்.

இப்போதுதான் குதூகலத்திற்குக் கடிவாலம்ம் போடுகின்ற நேரம் வந்திருக்கிறது. சுற்றுலா சுகமானது என்பதில் அனைருக்கும் ஒரே பதில்தான். ஆம் என்றுதான் கூறுவார்கள்.

சுகமானதை சுகமானதாக வைத்திருக்க வேண்டும். சுற்றுலா போய் திரும்பும் வரை கொண்டு செல்லும் பொருட்களில், பாதுகாப்புக்கு என்னென்ன இருக்கிறது என்பதைக் கவனிக்க மறந்துவிடுவதுண்டு. சுற்றுலா அவசரம் சிலவற்றை மறக்கச் செய்துவிடும்.

செல்லும் வழியில் பொதுகழிப்பறை, அங்குள்ள ஓய்வு இடம், பொதுவாக பலரும் கூடும் இடமெல்லாம் பாதுகாப்பானவை என்பதற்கு எந்த அறிகுறியும் இருக்காது.

சுகமாகச்சென்று சுகவீனமாகத் திரும்பக்கூடாது  என்றால் பாதுகாப்பு நிரந்தரமாக இருக்க வேண்டும். ஒருதரம் நிரந்தரம் என்பதல்ல பாதுக்காப்பு. கைப்பைபோல் அருகிலேயே இருக்க வேண்டும்.

.சுற்றுலா சென்று வந்ததும் பரிசோதனை என்பதும் கவனத்தில் இருக்க வேண்டும். அதே வேளை சுற்றுலா செல்லும் கூட்டம் நிறைந்ததாக இருக்கக்கூடாது.

கூட்டம் நிறைந்த இடம் சுகாதாரம், கூடல் இடைவெளி இல்லாமல்தான் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here