PKR தேசியக் காங்கிரஸ் 2026: அரசியல் பாகுபாடின்றி நேரடியாக மக்களுக்கு நிதி சென்றடைய அன்வார் உத்தவாதம்!

மலாக்கா:

அரசியல் வேறுபாடுகள் காரணமாக மக்களுக்குக் கிடைக்க வேண்டிய உதவிகளும் வளர்ச்சித் திட்டங்களும் ஒருபோதும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, நாட்டின் ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் கூடுதலாக RM1 மில்லியன் (10 லட்சம் ரிங்கிட்) நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

மலாக்காவில் நடைபெற்ற PKR கட்சியின் தேசியக் காங்கிரஸ் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு வழங்ப்படும் வளர்ச்சி நிதியை அரசாங்கம் வேண்டுமென்றே முடக்குவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை முற்றிலும் நிராகரித்தார்.

May be an image of text

“எதிர்க்கட்சி ஆட்சியிலுள்ள மாநில மக்கள் பாதிக்கப்படுவதை இந்த அரசாங்கம் விரும்பவில்லை. எனவே, அரசியல் பாகுபாடின்றி நேரடியாக மக்களுக்குச் சென்றடையும் வகையில் ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் கூடுதலாக RM1 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது,” என்று அவர் உறுதியளித்தார்.

தேசியக் கூட்டணி (PN) வசமுள்ள மாநிலங்களுக்கு நிதி வழங்குவது தொடர்பாகத் தொடக்கத்தில் அம்னோ (UMNO) தலைவர்கள் சிலரிடம் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டே தாம் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெளிவுபடுத்தினார்.

மாநில அரசுக்கும் கூட்டரசு அரசாங்கத்திற்கும் இடையே அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும், நாட்டின் சாதாரண பொதுமக்கள் அதன் விளைவுகளைச் சந்திக்கக் கூடாது என்பதில் மடானி (Madani) அரசாங்கம் உறுதியாக உள்ளதாகப் பிரதமர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here