விரைவில் என்பது விடியல் அல்ல

கல்வி என்பது முகம் பார்த்து, முறுவல் பூத்து வணக்கம் சொல்லி, சந்தேகங்களை எழுப்பி, கேள்விகளை எழுப்பி, பதில் பெறும்போது, ஓ.. என்ற ஓசையுடன் கிடைக்கும் பரிசு. கல்விக்கு ஈடு வேரேதும் இல்லவே இல்லை. அந்த நட்பு வட்டம் அழகிய பூங்கா!

இப்படித்தான மாணவர்கள் நினைக்கத் தொடங்கியிருக்கின்றனர். இந்த சிந்தனை வர என்ன காரணம்?

நீண்ட விடுமுறை என்பதில், ஆர்வமாய் இருந்த மாணவர்களுக்கு ஓர் இழப்பு அதிகமாகி மன உளைச்சலுக்கு ஆளாக்கிவதை  உணரமுடிந்திருக்கிறது.

மாணவர்களின் தனிமைக் கலாச்சாரம் கல்விக்கு உகந்ததாக இல்லை என்று  உணரப்பட்டிருக்கிறது.

குழந்தைகளின் உலகம் தனி உலகம். அதில் பெரியவர்களுக்கு இடம் அதிகம் இருப்பதில்லை. மாணவர்களாக இருந்தால் அவர்களின் உலகம் கல்வி உலகமாக மாறிவிடும். மாணவர்களின் நட்பு வட்டம் என்பதை யாராலும் அசைக்க முடியாது.

பள்ளியைப் பொறுத்த வரையில் ஆசிரியர்களே பெற்றோர்கள். அவர்களைக்கண்டு பேசுவதே பேரின்பம். வணக்கம் டீச்சர் என்றால் அது கல்வியின் ஆனந்தம்.,

இவற்றையெல்லாம் ஆன் லைன் கல்வியில் பெறமுடியுமா? முடியாது என்பதுதான் பதிலாக இருக்கிறது.

தனிமையில் படிக்கலாம். பகிர்வுக்குத் தனிமை உதவாது. சந்தேகத்தை ஆன் லைன் மூலம் பெறமுடியும். ஆன் லைனில் கல்வியில் முழுமைப்பெறமுடியுமா?

மாணவர்களுக்கு உற்சாகம் அளித்த கல்வி துவண்டு கிடக்கிறது. முகம் பார்த்துப் பழகும் சூழல் சுருண்டு கிடக்கிறது. விரக்தி நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுவிட்டனர்.

எப்போது பள்ளிக்கூடம் திறக்கும் என்ற மன நிலைக்கு  மாணவர்கள் வந்துவிட்டனர். கல்வியும் காலமும் விரயமாகிக் கொண்டிருக்கின்றன. மாணவர்களின் விளையாட்டு உலகம் வீணாகிக்கொண்டே இருக்கிறது என்ற கவலை பெற்றொர்களுக்கு வந்துவிட்டது.

பள்ளியில் பழகிய நட்புகள், கூடல் இடைவெளியால் விலகியிருக்கின்றன என்ற கவலையில் இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு விடியல் எப்போது?

பள்ளிக்கு வாங்க பழகலாம் என்ற வார்த்தைக்குப் பலன் கிடைக்குமா? விரைவில்   என்று முடித்துவிட முடையாது. அது செயலாக்கம் பெறவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here