உணவுப்பொருட்களின் விலை இமயமலை

தேவையான அத்தியாவசிய பொருட்கள் நிறைந்து கிடக்கின்றன என்று உள்நாட்டு வாணிபம், பயனீட்டாளர்துறை அமைச்சு அறிவித்திருக்கிறது. இச்செய்தியை முதன்மை அமைச்சர் டத்தோஶ்ரீ சப்ரி யாக்கோப் கூறியிருக்கிறார்.

தேவையான பொருட்கள் என்பது என்ன? அனைத்தும் அத்தியாவசிய பொருட்கள் என்பதாகவே இருக்கிறது என்பது அமைச்சருக்குத் தெரியாமல் இருக்கவேண்டும்! அல்லது உணவுப் பொருட்களையே முதன்மை உணவுப்பொருட்களாகக் கருத்தில் கொண்டு கூறியிருக்கிறார் போலவே தோன்றுகிறது.

வெளிநடப்புகள் பற்றிய உண்மைகள் பல சொல்லப்படாத செய்திகளாக்வே இருக்கின்றன. சொன்னாலும் நிவர்த்தி, நடவடிக்கை என்பது சரியாக இயங்குகிறதா என்பதில் இன்னும் ஐயம் இருக்கிறது.

பரவலாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை என்ன என்று அமைச்சு அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை. அத்தியாவசியப் பொருட்களின் விலை இடத்திற்கு ஒன்றாக இருக்கிறது. கோரோனா காலத்தில் பகல் கொள்ளை என்பார்களே! அதுபோலத்தான் இருந்தது. நடவடிக்கைகள் பேசுகின்ற அளவில் இல்லை.

விலைக் கட்டுப்பாடு முறையாகக் கையாளப்பட்டால் அத்தியாவசிய பொருட்கள் சரியான விலையில் அனைவருக்கும் கிடைக்கும். எல்லாவற்றிலும் ஏமாறுகின்றவர்கள், ஏமாறுகின்றவர்கள் மக்களாகத்தான் இருக்கிறார்கள்.

மக்களுக்குத்தேவை அறிக்கைகள் அல்ல அவசிய நடவடிக்கை. அமலாக்க அதிகாரிகளின் இடைவிடாத சோதனை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here