இன்று பெண்குயின் டிரெய்லர் ரிலீஸ்

ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் பெண் குயின். இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய ஸ்டோன் பென்ச் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் டீசர் 2 நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 3 மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் அமேசான் பிரைமில் வரும் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில், படத்தின் டிரெய்லர் இன்று மதியம் 12 மணிக்கு வெளியாகியது.

பெண்குயின் படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் தனுஷ் வெளியிடுகிட்டார். தெலுங்கு டிரெய்லரை நானியும் மலையாளத்தில் மோகன்லாலும் வெளியிட்டார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here