குற்றத்தின் பரிசு

எப்படிப் பார்த்தாலும் சுகாதாரம், பாதுகாப்பு இரண்டுமே மிக முக்கியமான அம்சமாக இருக்கிறது. இவ்விரண்டையும் நிலை நாட்டுவதே சுகாதாரத்துறைக்கும், பாதுகாப்பு துறைக்கும் கடுமையான சவாலாக இருக்கிறது.

இதற்கெல்லாம் யார் காரணம்?

மக்கள்தான் காரணம் என்றால் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். ஒத்துக்கொள்ளும் மனப்பான்மை இருந்தால் பிரச்சினகளுக்கும் வேலையில்லை. போலீசுக்கும் பிரச்சினைகல் குறையும். அமைதிப்பூங்கா என்பதுபோல் வெள்ளைபுறாக்களே பறக்கும்.

கூண்டிலிருந்து விடுபட்ட பறவைகள் போல் மக்களின் வேகம் சொந்த ஊருக்குப் புறப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதில் அவசரம் தெரிகிறது. அவசரத்தில் பல தவறுகள் நேரலாம். சாலைகளில் இவை எதிர்பாராமல் நிகழும். அதனால் அடிதடி ரவுடித்தனங்கள் ஏற்படும்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்கிறார் புக்கிட் அமான் காவல்துறையின் துப்பறியும் நடவடிக்கைக் குழுவின் 42 ஆவது பிரிவுன் இயக்குநர் டத்தோ டத்தோ அஸிஸ்மான் அலியாஸ்.

தவறு செய்கின்றவர்கள் மீது மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டின் அடிப்படையில் சட்டம் பாயும் என்கிறார் அவர். சாலைகள் பந்தயக் களங்கள் அல்லவென்று பல முறை கூறியாகிவிட்டது, மோட்டார் சைக்கிலோட்டிகள் பல வேளைகளில் சட்டத்தை மீறி பந்தயம் வைக்கின்றனர், ஊர்வலம் போகின்றனர். சாலை சாகசங்கள் செய்கின்றனர். தவறு என்று தெரிந்தும் அதைச்செய்கின்றனர். தவறு என்பது தவறிச்செய்வது, அதைத்தெரிந்தே செய்தால் குற்றம்.

குற்றம் எதைப்பரிசாகக் கொடுக்கும்? சாலைத்தடுப்புகள் அதைப்புரிய வைக்கும். பரிசுகள் சிறைவாசமாகவும் இருக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here