கொரோனா பாதிப்பு பட்டியலில் இந்தியா 4வது இடம்

கொரோனாவால் நாட்டில் இதுவரை 2 லட்சத்து 89 ஆயிரத்து 701 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை சமீப நாட்களாக அதிகரித்துள்ளது.

இந்த எண்ணிக்கை உயர்வால் உலகளவில் கொரோனா பாதிப்புப் பட்டியலில் 4ஆம் இடத்திலிருந்த இங்கிலாந்தை 5ஆம் இடத்திற்குத் தள்ளிவிட்டு இந்தியா ஒருபடி முன்னேறியுள்ளது.

எனினும் பாதிப்பு பட்டியலில் அமெரிக்கா நினைத்துக்கூடப் பார்க்க முடியாதளவு பாதிப்புகளைச் சுமந்து முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் இதுவரை 20 லட்சத்து 89 ஆயிரத்து 701 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு லட்சத்து 16 ஆயிரம் பேர் உயிரிழந்து விட்டனர்.

அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் பிரேசில் உள்ளது. பிரேசிலில் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 5 ஆயிரத்து 649 ஆக உள்ளது. இங்கு உயிரிழந்தவர்கள் 41 ஆயிரத்து 58 பேர்.

பட்டியலில் 3வது இடத்தில் ரஷ்யா உள்ளது. இங்கு 5 லட்சத்து 2 ஆயிரத்து 436 பேர் பாதிக்கப்பட்டு, அதில் 6 ஆயிரத்து 532 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் இந்த பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்து 501 ஆக உள்ளது. அதே வேளையில் ஒரு லட்சத்து 46 ஆயிரம் பேர் நோயை எதிர்த்துக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here